திரைக்கதையில் எதார்தத்தை விட வித்தியாசத்தை அதிகம் புகுத்தி, படம் இயக்கும் இயக்குனர்களில் ஒருவர் மிஷ்கின். என்ன தான் இருட்டில் படமெடுக்கிறார் என சிலர் கலாய்த்தாலும், மிஷ்கினின் உலக தர சினிமாவை யாரும் ஓரமாக ஒதுக்கி தள்ள முடியாது. இவர் இயக்கத்தில் கடைசியாக உதயநிதி நடித்து வெளியான “சைக்கோ” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இதுவரை உதயநிதி நடித்த படங்களிலேயே இந்த படத்தில் அவருடைய வித்தியாசமான நடிப்பை பார்க்க முடிந்ததாகவும் ரசிகர்கள் பல பாசிட்டிவ் கமெண்டுகளை தெரிவித்து வந்தனர்.

இந்த படத்தை தொடர்ந்து, நடிகர் விஷால் நடிப்பில் ஏற்கனவே கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற “துப்பறிவாளன்” படத்தின் இரண்டாம் பாகத்தை மிஷ்கின், விஷாலை வைத்து இயக்கி வந்தார். ஆனால் இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது இயக்குனர் மிஷ்கினுக்கும், விஷாலுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த படத்தில் இருந்து விலகினார் மிஷ்கின்.  பின்னர் இந்த படத்தை, விஷாலே இயக்கி நடிக்க முடிவெடுத்தார்.  ஆனால் தற்போது வரை, இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் வெளியாகவில்லை.

மேலும் செய்திகள்: நாளை முதல் 'பாண்டியன் ஸ்டார்' சீரியலில் ஏற்படும் முக்கிய மாற்றம்..! வீடியோ வெளியிட்ட வி.ஜே.சித்ரா..!
 

மேலும் தற்போது அடுத்த படத்தை இயக்க தயாராகி விட்டார் மிஷ்கின். இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, செப்டம்பர் 20ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு அடுத்த படம் குறித்து தெரிவிக்க உள்ளதாக ஏற்கனவே ட்விட் செய்திருந்த நிலையில், இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

 

மேலும் செய்திகள்: பாண்டியன் ஸ்டோர் தனம் அண்ணியின் கணவர் மற்றும் குழந்தையை பார்த்திருக்கீங்களா? புகைப்பட தொகுப்பு!
 

கடந்த 2014 ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த ’பிசாசு’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ஆறு ஆண்டுகளுக்கு பின் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. ’பிசாசு 2’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடிகை ஆண்ட்ரியா நடிக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு கார்த்திக்ராஜா இசையமைக்க இருப்பதாகவும், இந்தப் படத்தை ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

இதுகுறித்த போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார் மிஷ்கின். மேலும், இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கபப்டுகிறது.