Asianet News TamilAsianet News Tamil

நாளை முதல் 'பாண்டியன் ஸ்டார்' சீரியலில் ஏற்படும் முக்கிய மாற்றம்..! வீடியோ வெளியிட்ட வி.ஜே.சித்ரா..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அணைத்து தொடர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக, அண்ணன், தம்பிகளின் பாசத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாககும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் இல்லத்தரசிகளின் ஃபேவரட்.  கூட்டுக் குடும்பத்தின் ஒற்றுமையை இந்த சீரியலில் பார்க்கலாம். 
 

vj chtira about pandian store serial changes
Author
Chennai, First Published Sep 20, 2020, 11:41 AM IST

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அணைத்து தொடர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக, அண்ணன், தம்பிகளின் பாசத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாககும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் இல்லத்தரசிகளின் ஃபேவரட்.  கூட்டுக் குடும்பத்தின் ஒற்றுமையை இந்த சீரியலில் பார்க்கலாம். 

இந்த சீரியலில் நடிகர் ஸ்டாலின், மூத்த அண்ணனாக நடிக்கிறார். அண்ணி வேடத்தில் சுஜிதா நடித்து வருகிறார். மேலும் வி.ஜே.சித்ரா, குமரன், ஹேமா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

vj chtira about pandian store serial changes

இந்நிலையில் இந்த சீரியலில் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றம் குறித்து, பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்து வரும், வி.ஜே.சித்ரா வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார். இதில், செப்டம்பர் 21 ஆம் தேதி முதல், அதாவது நாளையில் இருந்து,  பாண்டியன் ஸ்டோர் சீரியல் 1 மணி நேரம் ஒளிபரப்பாகும் என தெரிவித்துள்ளார். 

vj chtira about pandian store serial changes

ஏற்கனவே லாக்டவுனுக்கு பின்னர் அரை மணி நேரமாக இருந்த சீரியல்கள்  ஒரு மணி நேரமாக மாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பாகியது. பின்னர் மீண்டும்  அரை மணிநேரமாக குறைக்கப்பட்ட சீரியல் நேரம், தற்போது மீண்டும் ஒரு மணிநேரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

vj chtira about pandian store serial changes

'மௌனராகம்'  சீரியல் முடிவடைவதால், அந்த தொடரின் நேரத்தில் பாண்டியன் ஸ்டோர் தொடர் ஒளிபரப்பாக உள்ளதாக தெரிகிறது. விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் மீனாவிற்கு குழந்தை பிறந்துள்ளதால் குடும்பமே படு குஷியாக உள்ளது. மேலும் மீனா கதாபாத்திரத்தில் நடித்த ஹேமாவுக்கு உண்மையிலேயே குழந்தை பிறந்துள்ளதால், இந்த சீரியலில் தொடர்ந்து நடிப்பாரா, அல்லது விலகுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow Us:
Download App:
  • android
  • ios