பவர் ஸ்டார், மிர்ச்சி சிவா, போன்ற பலருக்கு டான்ஸ் ஆடுவதில் ஒரு சிறுவன் செம்ம டஃப் கொடுத்துள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகர் ஷாம், ஜோதிகா, சினேகா, சிம்ரன் போன்ற பலரது நடிப்பில் வெளியான 12B படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிகராக அறிமுகமானவர் பிரபல ஆர்.ஜே. மிர்ச்சி சிவா. இதை தொடர்ந்து கமல் நடித்த ஆளவந்தான், விசில் போன்ற படங்களில் நடித்தார்.

மேலும் செய்திகள்: ஐஸ்வர்யா ராஜேஷின் பிளான் B என்ன? உதவி செய்யும் விஜய் சேதுபதி!
 

ஆனால் இவரை ரசிகர்கள் மத்தியில், ஹீரோவாக அறிமுகப்படுத்திய திரைப்படம் என்றால், அது கடந்த 2007 ஆம் ஆண்டு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான 'சென்னை 6000028 ' திரைப்படம் தான்.

தமிழ் படம், கலகலப்பு, தில்லு முல்லு, யா யா, வணக்கம் சென்னை என தொடர்ந்து பல படங்களில் நடித்து கலக்கினார்.

இந்நிலையில் தமிழ்ப்படத்தில் மிர்ச்சி சிவா நடனமாடியது போலவே, சிறுவன் ஒருவன் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலானது. சிவாவை போலவே பாவனைகள் செய்து கொண்டு ஆடும் அச்சிறுவனின் ஆட்டம் நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது. அந்த வீடியோவை பார்த்த சிவா, என்னை போலவே ஒரு நல்ல டான்ஸராக வரும் திறமை இச்சிறுவனுக்கு இருக்கிறது என பாராட்டி ட்விட் செய்துள்ளார்.

மேலும் செய்திகள்: படுக்கையறையில் ஆண் நண்பருடன் கெட்ட ஆட்டம் போட்ட மீரா மிதுன்! வச்சு செய்யும் நெட்டிசன்கள்! வைரலாகும் வீடியோ!
 

2018 ஆம் ஆண்டு தமிழ் படம் 2 படத்தை அடுத்து, சிவா நடித்துள்ள சுமோ படம், பொங்கல் தினத்தை முன்னிட்டே வெளியாக இருந்த நிலையில், சூப்பர் ஸ்டாரின் பேட்ட படம் மற்றும் தனுஷின் பட்டாஸ் ஆகிய படங்கள் வெளியானதால் இப்படம் ரிலீஸில் இருந்து பின் வாங்கியது. எனவே கொரோன பிரச்சனைக்கு பின்னரே இந்த படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஹோசிமின் இயக்கிய இந்த படத்தில் பிரியா ஆனந்த், VTV கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். ராஜிவ் மேனன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள பார்ட்டி படத்திலும் சிவா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்: ஹீரோயினுக்கு அடி போடும் பேபி சாரா... தெய்வத்திருமகள் இப்படி தேவதையாய் மாறி மனசை கொள்ளையடிக்கிறாரே....!
 

இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ இதோ: