ஹீரோயினுக்கு அடி போடும் பேபி சாரா... தெய்வத்திருமகள் இப்படி தேவதையாய் மாறி மனசை கொள்ளையடிக்கிறாரே....!
2011 ஆம் ஆண்டு பாலிவுட் திரையுலகில் வெளியான '404 ' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், பேபி சாரா. இதை தொடர்ந்து, தமிழில் அதே ஆண்டில், இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிகர் விக்ரம், அனுஷ்கா, அமலாபால், உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான 'தெய்வத்திருமகள்' படத்தில் நடித்து, ஒட்டு மொத்த ரசிகர்கள் மனதையும் கொள்ளையடித்தார்.

இந்த படத்திற்காக இவருக்கு சில விருதுகளும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து, தமிழில் 'சைவம்', விழித்திரு, போன்ற படங்களில் நடித்திருந்தார். கடைசியாக 'சில்லு கருப்பட்டி' படத்தில் நடித்திருந்தார்.
மேலும், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் சாரா அர்ஜுன் தொடர்ந்து நடித்து வந்தார்.
தற்போது பேபி சாரா, அழகு குமரியாக மாறி அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதனால் இவர் அடுத்ததாக ஹீரோயினுக்கு அடி போட்டு வருவதாக பேச்சுகள் அடிப்பட்டு வருகிறது.
தெய்வத்திருமகளாய் வந்து தற்போது ரசிகர்கள் மனதை கொள்ளை அடிக்கும் தேவதையின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில இதோ...