Asianet News TamilAsianet News Tamil

ஐஸ்வர்யா ராஜேஷின் பிளான் B என்ன? உதவி செய்யும் விஜய் சேதுபதி!

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடி எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இவர்கள், இருவரும் இதுவரை இணைந்து நடித்திருந்த, ‘பண்ணையாரும் பத்மினியும்’ ‘ரம்மி’ மற்றும் ’தர்மதுரை’ ஆகிய படங்கள் வெற்றி பெற்றதோடு. ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களையும் பெற்றது. 
 

asihwarya rajesh movie first look released by vijay sethupathi
Author
Chennai, First Published May 7, 2020, 3:47 PM IST

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடி எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இவர்கள், இருவரும் இதுவரை இணைந்து நடித்திருந்த, ‘பண்ணையாரும் பத்மினியும்’ ‘ரம்மி’ மற்றும் ’தர்மதுரை’ ஆகிய படங்கள் வெற்றி பெற்றதோடு. ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களையும் பெற்றது. 

மேலும் இருவர் நடிப்பிலும் உருவாகியுள்ள, ‘இடம் பொருள் ஏவல்’ திரைப்படம் அணைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், ஒரு சில காரணங்களால் இன்னும் வெளியாகாமல் உள்ளது. எனவே கொரோனா பிரச்சனை முடிவிற்கு வந்ததும், இப்படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கலாம். 

asihwarya rajesh movie first look released by vijay sethupathi

தமிழை தாண்டி, தெலுங்கு, மலையாமல் உள்ளிட்ட மொழிகளிலும் நடிக்க துவங்கி விட்ட, ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்ந்து கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

மேலும் செய்திகள்: படுக்கையறையில் ஆண் நண்பருடன் கெட்ட ஆட்டம் போட்ட மீரா மிதுன்! வச்சு செய்யும் நெட்டிசன்கள்! வைரலாகும் வீடியோ!
 

அந்த வகையில், கடைசியாக இவர் நடிப்பில் வெளியான வானம் கொட்டட்டும், வேர்ல்ட் பேமஸ் லவ்வர், ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவரின் கை வசம் அரை டஜன் படங்கள் இருந்த போதிலும் தற்போது படங்கள் வெளியிட முடியாத சூழல் உள்ளது.

asihwarya rajesh movie first look released by vijay sethupathi

இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை இன்று மாலை 6 மணிக்கு விஜய்சேதுபதி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட உள்ளார்.  கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக உள்ள இந்த படத்தை, விக்னேஷ் கார்த்திக் இயக்க, சதீஷ் என்பவர் இசையமைக்கவுள்ளார்.

மேலும் செய்திகள்: ஹீரோயினுக்கு அடி போடும் பேபி சாரா... தெய்வத்திருமகள் இப்படி தேவதையாய் மாறி மனசை கொள்ளையடிக்கிறாரே....!
 

இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள படக்குழு, பிளான் பி என்ன? ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, நடிகர் விஜய் சேதுபதி வெளியிடுகிறார் என தெரிவித்துள்ளனர்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios