பிரபல மாடலும் நடிகையுமான, மீரா மிதுன் கொரோனா வைரஸால் தற்போது போடப்பட்டிருக்கும் ஊரடங்கு ஓய்வை எப்படி, கழிப்பது என தெரியாமல் விதவிதமான, புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியிட்டு ரகரகமான சர்ச்சையை உருவாக்கி வருகிறார். 

பிரபல மாடலும் நடிகையுமான, மீரா மிதுன் கொரோனா வைரஸால் தற்போது போடப்பட்டிருக்கும் ஊரடங்கு ஓய்வை எப்படி, கழிப்பது என தெரியாமல் விதவிதமான, புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியிட்டு ரகரகமான சர்ச்சையை உருவாக்கி வருகிறார்.

சமீபத்தில் கூட, யாரோ ஒருவர் மீரா மிதுனை மிகவும் மோசமாக மாஃபிங் செய்து போட்டோ வெளியிட, அதனை முதலமைச்சர் மற்றும் பிரதமருக்கு டேக் செய்து, சமூக வலைத்தளத்தில் இது போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்பவள் நானாகத்தான் இருப்பேன். இருப்பினும் அரசாங்கத்தின் சார்பில் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படுவது இல்லை. 

இதுபோன்ற கயவர்களால் பல பெண்கள் வாழ்க்கை பாழாகிறது. இப்படி பட்டவர்களுக்கு பெயிலில் வர முடியாத அளவிற்கு, தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும். என்னை மன்னித்து விடுங்கள் பிரதமர். இங்கு போலீஸ் மற்றும் சட்டம் என இரண்டிற்குமே மதிப்பு இல்லை. ஆபாசமாக பெண்களை சித்தரிப்பவர்களை குண்டர் சட்டத்தில் போட வேண்டும் என மன குமுறலை வெளிப்படுத்தியுள்ளார் மீரா மிதுன்.

மேலும் செய்திகள்: மிக மோசமாக மாஃபிங் செய்து அசிங்க படுத்திய நபர்! பிரதமர் - முதலமைச்சருக்கு டேக் செய்து குமுறிய மீரா மிதுன்!

மீராமிதுன் குறித்த இந்த புகைப்படமும், மீராமிதுனின் புகாரும் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவரின் இந்த கதறலை கேட்டு, மீரா மிதுனை திட்டியவர்கள் கூட, ஆறுதலாக சில வார்த்தைகள் கூறி இருந்தனர். 

மேலும் செய்திகள்: ஹீரோயினுக்கு அடி போடும் பேபி சாரா... தெய்வத்திருமகள் இப்படி தேவதையாய் மாறி மனசை கொள்ளையடிக்கிறாரே....!

இந்த சம்பவம் அரங்கேறி 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில், ஆண் நண்பருடன், படுக்கை அறையில் கருப்பு நிற ஹாட் உடையில், இவர் போட்டுள்ள ஆட்டம் மீண்டும் இவரை விமர்சிக்க வைத்துள்ளது.

இது பழைய வீடியோ என்றாலும், இப்போது இது தேவையா? என்பது தான் பலரது கேள்வி. இந்த வீடியோவில் ’மனம் மிகவும் வலியுடன் இருக்கும் போது எந்த வார்த்தையும் வெளிவராது’ என்று மீராமிதுன் குறிப்பிட்டு உள்ளார். ஏற்கனவே ஆண் நண்பர்களுடன் மீராமிதுன் நடனமாடிய பல வீடியோக்கள் வைரலாகி நிலையில் அந்தப் பட்டியலில் இந்த வீடியோவும் தற்போது இணைந்துள்ளது.

அதே போல் வழக்கம் போல், இந்த வீடியோவையும் நெட்டிசன்கள் தாறு மாறாக விமர்சித்தும் வருகிறார்கள்... இதுலாம் என்ன புதுசா...?

வைரலாகி வரும் அந்த வீடியோ இதோ...

View post on Instagram
View post on Instagram