பிரபல மாடலும் நடிகையுமான, மீரா மிதுன் கொரோனா வைரஸால் தற்போது போடப்பட்டிருக்கும் ஊரடங்கு ஓய்வை எப்படி, கழிப்பது என தெரியாமல் விதம்விதமான சர்ச்சையை இழுத்து வருகிறார்.

ஏற்கனவே,  பிக்பாஸ் நிகழ்ச்சியின் சர்ச்சைக்குரிய போட்டியாளராக அனைவராலும் அறியப்பட்ட இவர், பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான இயக்குனரும், நடிகருமான சேரனையே குலுங்க குலுங்க அழ வைத்துவிட்டார்.

பின் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தபின்னும் கூட, முகேனின் பற்றி சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத விதத்தில் இவர் பேசியதாக ஒரு ஆடியோ வெளியானது. ஆனால் இது தன்னுடையது இல்லை என மீரா மிதுன் மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்: விஜய் ஆன்டனியை மிஞ்சிய விஷ்ணு விஷால்! முழு சம்பளத்தையும் கொடுத்து உதவி!
 

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்து கொண்ட விதம், ரசிகர்களுக்கு இவர் மீது அதிருப்தியை ஏற்படுத்தியதால், இவர் நடிக்க இருந்த பெரிய பட்ஜெட் படங்களின் வாய்ப்பை கூட நழுவவிட்டார். பின்னர் கோலிவுட் தனக்கு சரி பட்டு வராது என, பாலிவுட் திரையுலகில் நடிக்க உள்ளதாக கூறிய மீரா மிதுன், அங்கு பட வேட்டை நடத்தியும் எதுவும் சரிப்பட்டு வராததால்.... ச்சீ... ச்சீ... இந்த பழம் புளிக்கும் என எண்ணம் தோன்றியதால் என்னவோ, மீண்டும் சென்னைக்கே வந்துவிட்டார்.

சமீபத்தில், அமைச்சர்கள் அனைவர் வீடுகளிலும் ஐடி ரெய்டு நடத்த வேண்டும். குறிப்பாக  தமிழக முதல்வர்  சுகாதாரத்துறை அமைச்சர் உள்பட அனைவர் வீட்டிலும் வருமான வரித்துறை ரெய்டு செய்ய வேண்டும். அப்படி நடத்தினால் கோடிக்கணக்கில் அவர்கள் வைத்துள்ள பணத்தை கொண்டு  அனைத்து மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு லட்சம் கொடுக்கலாம் என்று கூறி இருந்தார் என்பது அனைவரும் அறிந்தது தான்.

மேலும் செய்திகள்: குஷ்புவின் முதல் மகள் அவந்திகா இவ்வளவு ஜாலியான பெண்ணா? இதுவரை பார்த்திடாத இவரின் அட்ராசிட்டி புகைப்படங்கள்!
 

இதை தொடர்ந்து, தற்போது மற்றொரு சர்ச்சைக்குரிய புகைப்படத்தை... முதலமைச்சர் மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கு டேக் செய்து, குமுறியுள்ளார். 

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது... சமூக வலைத்தளத்தில் இது போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்பவள் நானாகத்தான் இருப்பேன். இருப்பினும் அரசாங்கத்தின் சார்பில் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படுவது இல்லை. 

மேலும் செய்திகள்: பதற வைத்த சன்னி லியோன்... அசிங்கமாக திட்டிய கணவர்..! வாழைப்பழத்தை வைத்து செஞ்ச வேலைய பாருங்க! வீடியோ
 

இதுபோன்ற கயவர்களால் பல பெண்கள் வாழ்க்கை பாழாகிறது. இப்படி பட்டவர்களுக்கு பெயிலில் வர முடியாத அளவிற்கு, தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும். என்னை மன்னித்து விடுங்கள் பிரதமர். இங்கு போலீஸ் மற்றும் சட்டம் என இரண்டிற்குமே மதிப்பு இல்லை. ஆபாசமாக பெண்களை சித்தரிப்பவர்களை குண்டர் சட்டத்தில் போட வேண்டும் என மன  குமுறலை வெளிப்படுத்தியுள்ளார் மீரா மிதுன்.

மீராமிதுன் குறித்த இந்த புகைப்படமும், மீராமிதுனின் புகாரும் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.