கொரோனாவை கொண்டு வந்த சீனாவில் கூட சமூக இடைவெளியுடன் இயங்க தியேட்டர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மலேசியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகளில் கூட தியேட்டர்கள் திறக்கப்பட்டன. ஆனால் தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்கப்படுவது எப்போது என்பது தான் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. இந்தியாவில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்கப்படும் என்ற தகவல் தீயாய் பரவியது. 

 

இதையும் படிங்க: பண்ணை வீட்டில் வாக்கிங்... செம்ம வைரலாகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீடியோ...!

ஒரு நாளைக்கு இரண்டு காட்சிகள், 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தியேட்டர்களை திறக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. கடந்த 4 மாதங்களாக தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் தியேட்டர் உரிமையாளர்கள் மட்டுமின்றி, தயாரிப்பாளர்களும் மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். கோடிகளில் பணம் போட்டு படம் எடுத்த தயாரிப்பாளர்கள் பலரும் கொஞ்சமாவது சம்பளத்தை குறைத்துக்கொள்ளுங்கள் என டாப் ஹீரோ, ஹீரோயினுக்கு கோரிக்கை வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

 

இதையும் படிங்க: சிம்பு - த்ரிஷாவிற்கு திருமணமா?... தீயாய் பரவும் தகவலின் உண்மை நிலவரம் இதோ...!

தமிழகத்தை பொறுத்தவரை நேற்று ஒரே நாளில் 4,965 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 643 ஆக உயர்ந்தது. இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 1,26,670 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 51,344 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 75 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 2,626 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். 

 

இதையும் படிங்க: நீச்சல் உடையில் தமன்னா... இதுவரை யாரும் பார்த்திடாத ஹாட் போட்டோ... செம்ம வைரல்...!!

இப்படிப்பட்ட சூழ்நிலையில் கூட தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தமிழகத்தின் தற்போதைய நிலையை பொறுத்தவரை தியேட்டர்களை திறக்க வாய்ப்பில்லை என்றும், வெளிநாடுகளைப் போல் சமூக இடைவெளியுடன் படம் பார்த்தால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு உரிய லாபம் கிடைக்காது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்