தர்பார் படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். கொரோனா லாக்டவுன் காரணமாக இந்த படப்பிடிப்பு தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ரஜினிகாந்த் போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். லாக்டவுன்  நேரத்தில் அமிதாப் பச்சன், சிரஞ்சீவி, மோகன் லால் உள்ளிட்ட சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து வீட்டில் இருந்த படியே கொரோனா விழிப்புணர்வு விளம்பரத்தில் நடித்தார். 

 

இதையும் படிங்க: சிம்பு - த்ரிஷாவிற்கு திருமணமா?... தீயாய் பரவும் தகவலின் உண்மை நிலவரம் இதோ...!

அதன் பின்னர் பிரதமர் மோடி சொன்னபடி போயஸ் இல்லத்திற்கு வெளியே மெழுவர்த்தி ஏந்தி நின்றார். இதுமட்டுமே சூப்பர் ஸ்டாரை இந்த லாக்டவுன் நேரத்தில் மக்கள் காண கிடைத்த தருணங்கள் ஆகும். இதனிடையே ரஜினிகாந்த் மாஸ்க் அணிந்தபடி ஸ்டைலாக லம்போர்கினி காரை ஓட்டிச்சென்ற புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி தாறுமாறு வைரலானது. 

 

அந்த காரில் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தினமும் சென்னை போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் இருந்து கேளம்பாக்கத்தில் அமைந்துள்ள பண்ணை வீட்டிற்கு சென்று வருவதாக தகவல்கள் வெளியாகின. இதனிடையே பண்ணை வீட்டில் மகள் செளந்தர்யா ரஜினிகாந்த், மருமகன் விசாகன், பேரன் வேத்  உடன் இருக்கும் போட்டோவும் வெளியாகி தாறுமாறு வைரலானது. 

 

இதையும் படிங்க: நீச்சல் உடையில் தமன்னா... இதுவரை யாரும் பார்த்திடாத ஹாட் போட்டோ... செம்ம வைரல்...!!

இன்று ரஜினிகாந்த் தனது பண்ணை வீட்டில் வாக்கிங் செல்லும் வீடியோ ஒன்று வெளியாகி தாறுமாறு வைரலாகி வருகிறது. அதாவது ரஜினி எப்போதும் தனது போயஸ் கார்டன் இல்லத்தில் காலை 5.30 மணிக்கு உடற்பயிற்சிகளை மேற்கொள்வது வழக்கம். தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக ஷூட்டிங் எதுவும் இல்லாததால் வீட்டிலேயே அடைந்து கிடக்க பிடிக்காமல் இயற்கையான சூழலில் நடைபயிற்சி செய்யலாம் என ரஜினிகாந்த் பண்ணை வீட்டிற்கு வந்து செல்கிறார். ரஜினியின் வாக்கிங் வீடியோ இதோ...