வெகு நாள் கழித்து ஒரு Meet Up.. ரம்யா கிருஷ்ணனை ஆசையோடு வரவேற்ற அமைச்சர் ரோஜா - வைரலாகும் வீடியோ!
நீண்ட நாட்கள் கழித்து, நண்பர்களான ரம்யா கிருஷ்ணன் மற்றும் அமைச்சர் ரோஜா ஆகிய இருவரும் அவரது நகரி பகுதியில் உள்ள வீட்டில் சந்தித்து பேசி மகிழ்ந்தனர்.

தெலுங்கு, கன்னடம், மலையாளம் இன்று பல இந்திய மொழிகளில் நடித்திருந்தாலும், தமிழ் மொழியில் அதிக அளவிலான ரசிகர்களை கொண்ட ஒரு நடிகை தான் ரம்யா கிருஷ்ணன். இவர் 1983ம் ஆண்டு தமிழில் வெளியான "வெள்ளை மனசு" என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அதிகமானார். அதன் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படிக்காதவன் திரைப்படத்தில் இவர் ஒரு சிறிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார்.
அன்று தொடங்கி இன்று வரை தமிழ் மொழியில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இவர் பல திரைப்படங்களில் இணைந்து நடித்திருக்கிறார். இன்றளவும் ஒரு வெற்றிகரமான நடிகையாக இந்திய சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார் Ramya Krishnan.
அதேபோல இவருக்கு திரைத்துறையில் இருக்கும் நெருங்கிய நட்பு வட்டாரங்களில் நடிகை ரோஜா அவர்களும் முக்கியமானவர். இவர்கள் இருவரும் இணைந்து தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக திரைப்படத்திலிருந்து ஓய்வு பெற்று, தனது அரசியல் பணியில் பிஸியாக இருந்து வருகிறார் Minister Roja என்பது குறிப்பிடத்தக்கது.
விறுவிறுப்பாக உருவாகும் விடுதலை பாகம் 2.. விஜய்சேதுபதியின் ஜோடி - களமிறங்கும் "அசுர நடிகை"!
இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றிருந்த நடிகை ரம்யா கிருஷ்ணன், மீண்டும் சென்னைக்கு திரும்பும் வழியில் நடிகரும் அமைச்சருமான ரோஜா விடுத்த அன்பு அழைப்பை ஏற்று நகரியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு நடிகை ரோஜாவும் அவருடைய கணவரும், இயக்குனர் ஆர்.கே செல்வமணியும் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். ரம்யா கிருஷ்ணன் அங்கு வருகை தரும் செய்தி அறிந்த அவருடைய பல ரசிகர்கள் ரோஜா வீட்டில் கூடி அவருக்கு சந்தோஷ வரவேற்பை கொடுத்தனர். வெகுநாட்கள் கழித்து தன்னுடைய நண்பியை சந்தித்த இருவரும் பல மணி நேரம் பேசி மகிழுந்துள்ளனர்.