பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த மார்ச் 31ம் தேதி வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்ற திரைப்படம் தான் விடுதலை.

முதல் முறையாக நடிகர் சூரி கான்ஸ்டபிள் குமரேசன் என்ற கதாபாத்திரத்தில் மிக மிக நேர்த்தியாக நடித்திருந்தார். இதுவரை அவர் மீது இருந்த காமெடியன் என்கின்ற அந்த ஒரு சாயல் மாறி அவரை மக்கள் எளிதாக ஒரு ஆக்சன் ஹீரோவாக ஏற்றுக் கொண்டனர் என்றால் அது மிகையல்ல. 

அதே போல பெருமாள் வாத்தியார் கதாபாத்திரத்தில், விஜய் சேதுபதி அவர்கள் மிக நேர்த்தியாக நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் நடித்திருந்த மூத்த நடிகர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், இளவரசு, சேத்தன் உள்ளிட்ட பலரும் தங்களுடைய நடிப்பை இயல்பாக வெளிப்படுத்தி இருந்தது மக்களை பெரிய அளவில் கவர்ந்தது. 

மாவீரன் பட Collection Report.. படக்குனு கெட்ட வார்த்தையில் திட்டிய ப்ளூ சட்டை மாறன் - ஒன்றுகூடிய ரசிகர்கள்!

இந்நிலையில் விடுதலை படத்தின் இரண்டாம் பாகமும் விறுவிறுப்பாக தற்பொழுது உருவாகி வருகிறது. இந்த படத்தினுடைய பணிகளை முடித்துவிட்டு அடுத்தபடியாக சூர்யாவின் வாடிவாசல் படத்தை இயக்கவிருக்கிறார் வெற்றிமாறன் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Scroll to load tweet…

இந்நிலையில் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தில் ஏற்கனவே விஜய் சேதுபதி அவர்களின் சொந்த மகன் நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தில் விஜய் சேதுபதியின் ஜோடியாக ஒரு கதாநாயகி களமிறங்கவுள்ளார்.

அவர் வேறு யாரும் அல்ல ஏற்கனவே இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் திரைப்படத்தில் தனுஷுக்கு நாயகியாக நடித்த மஞ்சு வாரியர் இந்த திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடிக்க உள்ளார் என்ற தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. 

'ஜெயிலர்' மூன்றாவது சிங்கிள் தானா வேணும்? அதெல்லாம் ஜுஜுபி மேட்டர்..! வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!