பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஜூலை 14ம் தேதி வெளியாகி, இரண்டாவது வாரத்திலும் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் தான் மாவீரன்.

இதற்கு முன்னதாக யோகி பாபுவை வைத்து "மண்டேலா" என்ற திரைப்படத்தை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற மடோன் அஸ்வின் இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவானது. 

இதுவரை சிவகார்த்திகேயனின் படங்களுக்கு இல்லாத அளவில் ஒரு மாபெரும் வரவேற்பு இந்த படத்திற்கு இருந்தது. மேலும் இந்த படத்தை பார்த்த பல பிரபலங்களும் இந்த படம் குறித்து நல்ல கருத்துக்களையே கூறினர். விமர்சன ரீதியாகவும், ரசிகர்கள் மத்தியிலும் மாவீரன் திரைப்படம் பெரும் வெற்றி அடைந்தது.

24 வருஷத்துக்கு முன் மகள் பிறந்தநாளுக்கு வாங்கிய பொருளை பேத்தியின் பர்த்டேக்கு கிப்டாக தந்த சாயிஷாவின் அம்மா

இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் தற்பொழுது மாவீரன் படத்தின் கலெக்ஷன் குறித்து சில தகவல்களை வெளியிட்டு இருந்தது. அதில் மாவீரன் திரைப்படம் இதுவரை சுமார் 75 கோடி வரை வசூல் செய்திருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.

Sivakarthikeyan Salary | சிவகார்த்திகேயன் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தற்போது இதை மேற்கோள்காட்டி ஒரு ட்வீட் ஒன்றை போட்டுள்ளார் பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன். அந்த பதிவில் அவர் OVOP கூறியுள்ளார். இணையதள மொழியை பொறுத்தவரை OVOP என்பது மிகப்பெரிய கெட்டவார்த்தை என்பதை பலர் அறிவர். 

மாவீரன் படத்தின் வசூலை குறித்து ப்ளூ சட்டை மாறன் இப்படி ஒரு கமெண்ட்டை செய்த நிலையில் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் அவரை கடுமையாக சாடி வருகின்றனர்.

பயம் காட்டிய ஜீவானந்தம்..! உயிர் பயத்தில்... நடு வீட்டில் ஒப்பாரி வைத்த குணசேகரன்! இன்றைய ப்ரோமோ