Asianet News TamilAsianet News Tamil

பயம் காட்டிய ஜீவானந்தம்..! உயிர் பயத்தில்... நடு வீட்டில் ஒப்பாரி வைத்த குணசேகரன்! இன்றைய ப்ரோமோ

ஜீவானந்தம் துப்பாக்கியை காட்டி, குணசேகரனுக்கு மரண பயத்தை காட்டி விட்டதால், தூக்கத்தில் இருந்து அலறி அடித்து கொண்டு எழுந்து, ஒப்பாரி வைக்கும் காட்சி தான் இன்றைய புரோமோவில் வெளியாகியுள்ளது.
 

Ethirneechal serial 25th july promo and episode details
Author
First Published Jul 25, 2023, 4:47 PM IST

அப்பத்தாவின் 40 சதவீத சொத்துக்களை எப்படியும்... அடைந்து விடலாம் என ஆணவத்தில் ஆடிய குணசேகரன் ஆசையில் ஜீவானந்தம் மண்ணை கொட்டிய நிலையில், எப்படியும் அவரிடம் இருந்து... மிரட்டியே சொத்துக்களை பிடுங்கி விடலாம் என எண்ணினார் குணசேகரன். ஆனால் ஜீவானந்தம், குணசேகரனை நோக்கி துப்பாக்கியை காட்டி மிரட்டியதோடு மட்டும் இன்றி, குண்டுக்கட்டாக தூக்கி வெளியே வீசிவிட்டார். பட்ட அசிங்கத்துக்கு, காவல் நிலையம் சென்று ஜீவானந்தம் மீது புகார் கொடுத்தாவது ஆறுதல் தேடலாம் என நினைத்தவருக்கு, அங்கும் ஏமாற்றமே மிஞ்சியது.

ஜீவனந்தத்திடம் இருந்து சொத்துக்களை வாங்க, ஒன்னு அப்பத்தவே எழுந்து வரணும்... இல்லனா உங்கள் வீட்டு பெண்களை வைத்து தான் இதை சாதிக்க முடியும் என, ஆடிட்டர் கொடுத்த ஐடியா படி, ஜனனியால் போன சொத்துக்களை அவர் மூலமாவே வர வைக்கிறேன் என சவால் விடுகிறார்குணசேகரன். மேலும் காரில் இருந்து வீட்டுக்குள் செல்லும் போது... குணசேகரன் பர்பாமென்ஸ் வேற லெவல்.

Ethirneechal serial 25th july promo and episode details

'குக் வித் கோமாளி' சீசன் 4 வெற்றியாளருக்கு இத்தனை லட்சம் பரிசாக கொடுக்கப்பட்டுள்ளதா? வெளியான தகவல்!

40 சதவீத சொத்துக்கு... ஓவராக அழுது புலம்பும் குணசேகரனை பார்த்து.. நந்தினி, 40 போன என்ன அதான் மீது 60 இருக்குது இல்ல என கூற... அதெல்லாம் ஒன்னும் இல்ல. அப்பத்தாவோடு ஷேர் தான் அதிகமா இருக்கு. அவங்க தான் இப்போ மெஜாரிட்டி ஷேர் ஹோல்டர்ஸ் என்றும், இந்த சொத்துக்களை கூட நான் அப்பத்தாவுக்கே கொடுத்துடுறேன். ஆனால் அடுத்தவ, இதை எடுத்துட்டு போக கூடாது என வீட்டு பெண்களை குணசேகரன் சப்போர்டுக்கு அழைக்க, நந்தினி சரி மாமா உங்களுக்கு துணையா நாங்க இருக்கோம் என கூறியதும் எதோ சாதித்தது போல், உணர்ந்தார் குணசேகரன்.

Ethirneechal serial 25th july promo and episode details

84 வயதில் 'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தில் ஹீரோவாக நடிக்கும் காமெடி கிங் கவுண்டமணி!

இன்றைய புரோமோவில், நன்றாக தூங்கி கொண்டிருக்கும் குணசேகரன் கனவில் ஜீவானந்தம் துப்பாக்கியால் சுட்டது போல் கனவு வர, உயிருக்கு பயந்து... எழுந்து உற்கார்ந்து நடு வீட்டில் ஒப்பாரி வைக்கிறார். கதிர் அண்ணனை தேற்ற, கரிகாலனோ 'சிங்கம் மாதிரி இருந்தீர்களே மாமா உங்களையே ஒருத்தன் செதச்சு புட்டானே' என கூறுவது ஹை லைட். இதுநாள் வரை கம்பீரமாக இருந்த குணசேகரனுக்கே இந்த நிலையா? என்றும்  அடுத்து என்ன நாடாகும் என்பதை பார்க்க ஆர்வமாக இருப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios