ஒரு மாடலாகவும், நடிகையாகவும் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை மீராமிதுன். 'தானா சேர்ந்த கூட்டம்', '8 தோட்டாக்கள்' ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களால் நன்கு அறியப்பட்டவர். 

மேலும், உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய, பிக்பாஸ் சீசன் 3 , நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லாமல் விளையாடினார்.

சமீபகாலமாக பாலிவுட் திரைப்படங்களில் நடிக்க போவதாக கூறி மும்பைக்கு சென்ற இவர், அங்கு படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. அதே போல்... "போதை ஏறி புத்தி மாறி" என்கிற படத்தில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

அவ்வபோது, உச்ச கட்ட கவர்ச்சியில் புகைப்படம் வெளியிட்டு... இளசுகளை சூடேற்றி வந்த மீராமிதுன் தற்போது மஞ்சள் நிற பிகினி உடையில், தலைகீழாக படுத்து கொண்டு மோசமான கவர்ச்சி லுக்கில் எல்லை மீறி போட்டோ பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது, சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது