Maya: நிக்சனை பொ**** சொன்ன ஐஷு! பிரதீப் மீது சுமத்தப்பட்ட பொய் புகார்! வாயை விட்டு சிக்கிய புல்லி கேங்!
நிக்சன் பற்றி ஐஷு, கூறிய மோசமான வார்த்தை குறித்தும்... பிரதீப் மீது தவறான குற்றச்சாட்டை முன் வைத்து வெளியே அனுப்பியதில் நிக்சனுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு என்பதை மாயா கூறிய வீடியோ வெளியாகியுள்ளது.
ஏற்கனவே பிரதீப் மீது, தவறான குற்றச்சாட்டை வைத்து ஹவுஸ் மேட்ஸ் மற்றும் கமல் வெளியேற்றி விட்டதாக ஒரு பக்கம், பிரதீப் ரசிகர்கள் தொடர்ந்து தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதே போல் பிரதீபுக்கு எதிராக வைக்கப்பட்ட பால் மேட்டர், அரணாகயிறு விஷயம் என அனைத்திற்குமே தொடர்ந்து குறும்படம் போட்டு பதிலடி கொடுத்து வருகின்றனர் பிரதீப் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள்.
அதே போல் பிரதீபுக்கு எதிராக உரிமைக்குரல் தூக்கிய அக்ஷயா, மாயா போன்றோர் தங்களிடம் பிரதீப் அப்படி நடந்து கொள்ளவில்லை ஆனால், தங்களை போன்ற பெண்கள் பாதிக்கப்பட்டதற்காக பிரதீபுக்கு எதிராக போர் கொடி தூங்குவதாக தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது மாயா, ஐஷு மற்றும் ஜோவிகாவிடம் பேசும் போது, ஐஷு நள்ளிரவில் அவள் பெட்டில் இல்லை. பிரதீப்பும் எழுந்து அமர்ந்திருந்தார். எனக்கு அதை பார்த்ததும் தூக்கமே வரவில்லை. எனவே ஐஷுவை பாதுகாப்பது போலவே பிரதீப் வெளியேற வேண்டும் என நினைத்ததாக தெரிவித்ததாக மாயா கூறியுள்ளார்.
Japan Review: ஜப்பானாக கார்த்தி ஜொலித்தாரா? அல்ல சோதித்தாரா.. திரைப்பட விமர்சனம் இதோ..!
ஆனால் கமல் முன்பு, பிரதீப்பை பற்றி மட்டுமே பேசிய நிக்சன், ஐஷுவை பற்றி சொல்லாமல்... பிரதீப் மீது தவறு இருப்பது போல் சித்தரித்து விட்டதாக பிரதீப் ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள். இந்த பேச்சு வார்த்தையின் போது ஐஷு தன்னை பொ**** என தவறான வார்த்தை கூறி பேசியதாக கூறி வருத்தப்பட்டானே தவிர, மற்ற பிரச்சனைகளை அவன் கண்டு கொள்ளவில்லை. அவன் ஐஷுவை பாதுகாப்பதில் தான் குறியாக இருக்கிறான் என மாயா கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D