Japan Review: ஜப்பானாக கார்த்தி ஜொலித்தாரா? அல்ல சோதித்தாரா.. திரைப்பட விமர்சனம் இதோ..!
'ஜோக்கர்' பட இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் வெளியாகியுள்ள பான் இந்தியா திரைப்படமான, 'ஜப்பான்' தீபாவளி ரிலீசாக இன்று வெளியாகியுள்ள நிலையில், இப்படத்தின் ட்விட்டர் விமர்சனம் குறித்து பார்ப்போம்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் பேனரின் கீழ், தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரகாஷ் பாபு மற்றும் எஸ்ஆர் பிரபு தயாரிப்பில். கார்த்தி இதுவரை நடித்திராத வித்யாசமான கதைக்களத்தில் நடித்துள்ள திரைப்படம் 'ஜப்பான்'. நடிகை அனு இம்மானுவேல், இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
'ஜப்பான்' படம் குறித்த தகவல் வெளியானதில் இருந்தே இப்படம் மீதான ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது. இதற்க்கு முக்கிய காரணம் இப்படத்தின் இயக்குனரான ராஜு முருகன். மேலும் இந்த எதிர்பார்ப்பை தூண்டும் விதத்தில், இப்படத்தில் இருந்து வெளியான டீசர், டிரைலர் மற்றும் பாடல்கள் அமைந்தன. இந்நிலையில் இப்படம் இன்று காலை 9 மணிக்கு வெளியான நிலையில், ரசிகர்கள் இப்படத்தை பார்த்துவிட்டு தொடர்ந்து தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 'ஜப்பானாக' கார்த்தி ஜொலித்தாரா? இல்லையா என்பதை ரசிகர்களின் ட்விட்டர் விமர்சனம் மூலம் தெரிந்து கொள்வோம்.
இப்படம் குறித்து கூறியுள்ள ரசிகர் ஒருவர், "சிறப்பான எழுத்து, அல்டிமேட் திரைக்கதை, பேங்கர் க்ளைமாக்ஸ் என கார்த்தி ஸ்டீல் தி ஷோ நெருப்பு பறக்க இருக்கிறது. இந்த தீபாவளிக்கு பக்கா கமர்ஷியல் மாஸ் ஆக்ஷன் படம் என கூறி இப்படத்திற்கு 4/5 என மதிப்பீடு கொடுத்துள்ளார்.
மற்றொரு ரசிகர் "ஜப்பான் திரைப்படத்தில் மீண்டும் கார்த்தியின் இருந்து அருமையான உணர்ச்சிப்பூர்வமான நடிப்பை பார்க்க முடிந்தது. 2 வது பாதி முழுக்க முழுக்க உணர்ச்சி மற்றும் ஆக்ஷன் ரோலர் கோஸ்டர், முதல் பாதிக்கு மாறாக உள்ளது . ஃப்ளாஷ்பேக் கொஞ்சம் இழுவை, க்ளைமாக்ஸ் செம்ம மாஸ் என தெரிவித்துள்ளார்.
ஜப்பான் குறித்து பதிவிட்டுள்ள மற்றொரு ரசிகரோ... "கார்த்தி ஒரு படத்தில் நடித்தால், பொழுதுபோக்கு நிச்சயம். முதல் பாதி: சூப்பர், இரண்டாம் பாதி ஃபயர். சிறந்த திரை அனுபவங்களில் அனுபவங்களில் ஒன்று, என கூறி இப்படத்திற்கு 4/5 மதிப்பீடு கொடுத்துள்ளார்.
இப்படம் படம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ரசிகர் ஒருவர், 'ஜப்பான் திரைப்படத்தின் முதல் பாதி தெரிகிறது. நேர்மறைகள் என ஒன்றுமில்லை. எதிர்மறைகள் இதுவரை எல்லாம் என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் வருவதை தாண்டி சிலர், நெகட்டிவ் விமர்சனமும் இப்படத்திற்கு கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் ரசிகர் ஒருவர்... "ஜப்பான் படம் பழைய கதை மோசமான திரைக்கதை, ரொம்ப போரிங், சராசரி Bgm & பாடல்கள், கார்த்தியிடம் இருந்து எரிச்சலூட்டும் மேனரிசம் பார்க்கமுடிகிறது. அவர் அடிக்கும் காமெடி காலாவதியானவை என தெரிவித்துள்ளார்.
கார்த்தியின் இப்படம் குறித்து விமர்சித்துள்ள மற்றொரு ரசிகரோ... "சமீபகால தமிழ் படங்களில் தலைசிறந்த ஒளிப்பதிவு பார்க்க முடிகிறது. கார்த்தி நடிப்பில் முன்னணியில் இருக்கிறார். புத்திசாலித்தனம், ஆக்ஷன், நகைச்சுவை, பிஜிஎம் ஒளிப்பதிவு. எல்லாமே ஃபயர். டெக்னிக்கல் தரப்பில் இருந்து சிறப்பான பணிகளை பார்க்க முடிவதாக தெரிவித்துள்ளார்.