Japan Review: ரொம்ப கேவலமா இருக்கு.. விஷத்தை குடிச்சுட்டு செத்துடலாம்! ஜப்பானை கிழித்து தொங்க விட்ட ரசிகர்கள்!

தீபாவளியை முன்னிட்டு, இன்று வெளியாகியுள்ள 'ஜப்பான்' திரைப்படம், தங்களை ரொம்ப சோதித்துவிட்டதாக ரசிகர்கள் கதறியபடி விமர்சனங்களை கூறி வருகிறார்கள்.
 

Karthi and Raju Murugan Japan movie getting worst reviews video mma

நடிகர் கார்த்தி தொடர்ந்து வித்தியாசமான படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். 'பருத்தி வீரன்' படத்தில் துவங்கி, இவர் நடிப்பில் வெளியான, சிறுத்தை, தீரன் அதிகாரம் ஒன்று, தோழன், சர்தார், விருமன், பொன்னியின் செல்வன், என ஒவ்வொன்றும் வெவ்வேறு கதைக்களத்தில் உருவாகி, கார்த்தியை முன்னணி  நடிகராக நிலைநிறுத்திய படங்கள் என்றால் மிகையல்ல. குறிப்பாக 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில், வந்தியத்தேவனாக மாறி, கார்த்தி வெளிப்படுத்திய நடிப்பை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது.

இந்நிலையில் கார்த்தியின் 25-ஆவது திரைப்படமாக உருவாகி இருந்த , 'ஜப்பான்' தீபாவளி வெளியீடாக இன்று வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து எதிர்மறையான விமர்சனத்தை பெற்று வருகிறது. கார்த்தி இப்படி பட்ட ஒரு படத்தை தேர்வு செய்து நடித்து தவறு செய்துவிட்டதாக ரசிகர்கள் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

Karthi and Raju Murugan Japan movie getting worst reviews video mma

மகேஷ் பாபுவின் தந்தை.. நடிகர் கிருஷ்ணாவின் திருவுருவச் சிலையை திறந்து வைத்த உலக நாயகன்!

அதே போல் அருவி போன்ற நல்ல படங்களை தயாரித்து வரும் எஸ்.ஆர்.பிரபு இதுபோன்ற படத்தை தயாரித்துள்ளது வேதனை அளிப்பதாகவும், ராஜு முருகனுக்கு கமர்ஷியல் வரவில்லை என்பதை இப்படம் நிரூபித்து வைத்ததாகவும், கார்த்தியின் திரை வாழ்க்கையில் இது தான் அவருக்கு மிகவும் மோசமான படம் என தெரிவித்து வருகிறார்கள். 

Karthi and Raju Murugan Japan movie getting worst reviews video mma

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

குறிப்பாக ஏசியா நெட் 'ஜப்பான்' படம் பார்த்த ரசிகர்களிடம் விமர்சனந்த்தை கேட்டபோது, பலர் மிகவும் மோசமான விமர்சனங்களையே இப்படத்திற்கு கொடுத்தனர். படத்தில் ஒரு கருத்தும் இல்லை. தீர்க்கமுடியாத ஒரு நோய்யால் பாதிக்கப்படும், திருடன்... அவனை பற்றிய ஒரு ஃபிளாஷ் பேக், கடைசியில் திருடிய நகைகளை மக்களுக்கே கொடுத்துவிட்டு போலீசில் சரண் அடைகிறான். இதில் வேற என்ன புதுசா இருக்கு. மொத்தத்தில் படம் சுத்த வேஸ்ட். இந்த படத்தை பாக்குறதுக்கு விஷத்தை குடிச்சிட்டு செத்துடலாம் என அந்த ரசிகர் பேசியுள்ளார்.

Japan Review: ஜப்பானாக கார்த்தி ஜொலித்தாரா? அல்ல சோதித்தாரா.. திரைப்பட விமர்சனம் இதோ..!

ஏசியா நெட் Public Review வீடியோ:

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios