விஜய்க்கு எதிராக போராட்டத்தில் குதித்த ஜூலி மீது வழக்கு பதிவு!
தளபதி விஜய்யின் தவெக கட்சி குறித்து, ஜூலி தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் நிலையில், தற்போது அனுமதி இன்றி போராட்டம் செய்து பிரச்சனையில் சிக்கி உள்ளார்.

ஜல்லிக்கட்டு ஜூலி:
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு கூச்சல் போட்டதன் மூலம் பிரபலமானவர் தான் ஜூலி. இதை தொடர்ந்து, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத போட்டியாளராக இருந்தார். குறிப்பாக ஓவியா மீது இவர் முன்வைத்த குற்றச்சாட்டுகளும், பின்னர் அதை பொய் என குறும்படம் போட்டு கமல்ஹாசன் பதிலடி கொடுத்ததும் இன்று வரை ரசிகர்களால் மறக்க முடியாதது.
நழுவி போன வாய்ப்புகள்:
நெகட்டிவ் விமர்சனங்களில் இருந்து மீண்டு, மீண்டும் சின்னத்திரையில் தொகுப்பாளராக தன்னுடைய கேரியரை துவங்கிய ஜூலி, சில திரைப்படங்களிலும் நடிக்க கமிட் ஆனார். இவர் ஹீரோயினாக நடித்த படங்கள் வெளியாவதற்குள், நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க இருந்த நிலையில், பின்னர் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த படம் கைவிடப்பட்டது.
திருமண முடிவு
பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால், சமீபத்தில் தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்ட இவர், இந்த அரசியல் நேரத்தை பயன்படுத்தி தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளார். தொடர்ந்து தளபதி விஜய்யின் பிரச்சார பேச்சுகளையும், தவெக கட்சியையும் விமர்சித்து வருகிறார். சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்கள் வழியாக தனது கருத்துகளை வெளிப்படுத்தி வந்த ஜூலி, கடந்த மாதம் திமுக கட்சிக்கு ஆதரவாக, விஜய்யை விமர்சிப்பதுபோல் பிரச்சார கூட்டத்தில் பேசியிருந்தார்.
போராட்டத்தில் குதித்த ஜூலி
ஒரு கையில் திமுக கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் பதாகையும், மற்றொரு கையில் அணில் படம் வைத்து தவெக கட்சி பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத கட்சி என தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவ்வையார் சிலை பின்புறம் உள்ள சர்வீஸ் ரோட்டில் நடந்த இவரது போராட்டத்தை யாரும் பெரிதாக கவனிக்காத நிலையில், தேர்தல் அதிகாரிகளின் அனுமதி இன்றி நடந்த இந்த போராட்டத்திற்காக இவரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்துள்ளனர்.
ஜூலி மீது வழக்கு பதிவு:
அனுமதி இன்றி இதுபோன்ற போராட்டங்களில் ஈடுபட கூடாது என அறிவுறுத்தியதோடு, பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் விதத்தில் நடந்து கொண்டது மற்றும் தேர்தல் அதிகாரிகளின் அனுமதி இன்றி போராட்டம் நடத்தியதாக இவர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் ஜூலி தனது நடவடிக்கையை நியாயப்படுத்தி, “இது என் கருத்து வெளியிடும் உரிமை” என வலியுறுத்தியுள்ளார். மேலும், பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் தான் இந்த போராட்டத்தை நடத்தியதாகவும் கூறியுள்ளார். அதே நேரத்தில், அவரது இந்த செயல் அரசியல் நோக்கத்துடன் செய்யப்பட்டதா அல்லது ஜூலியின் போலி விளம்பரத்திற்காக செய்யப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.