தற்போது தனிமையில் இருக்கும் அமலா பால், பூவின் வாசம் குறித்து இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை போட்டுள்ளார். பூவின் வாசம் சிலருக்கு புரிவதில்லை, அதை நாற்றும் என்று ஒதுக்குகிறார்கள் என்று இரட்டை அர்த்தத்தில் பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் ஏ.எல்.விஜய் உடனான விவகாரத்திற்கு பிறகு அமலா பால் தீவிரமாக சினிமாவில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர் என்றால் டிரஸ் இல்லாமல் கூட நடிக்க தயார் என்பதை “ஆடை” படம் மூலம் நிரூபித்தார். அமலா பால் இறுதியாக நடித்துள்ள “அதே அந்த பறவை போல” திரைப்படம் கொரோனாவால் ரிலீஸ் ஆகாமல் தள்ளிப்போயுள்ளது.

இதையும் படிங்க: “15 வயசிலேயே வீட்டை விட்டு ஓடி வந்தேன்”... “அந்த நபரால் தான்”...பகீர் கிளம்பும் பிரபல நடிகையின் பிளாஷ் பேக்!
சினிமா, வெப் தொடர் என நடிப்பில் கவனம் செலுத்தி வந்த அமலா பால், இடையில் ஏதோ இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக வதந்தி பரவியது. மும்பையைச் சேர்ந்த பாவ்னிந்தர் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டதாகவும், புகைப்படங்கள் எல்லாம் கூட வெளியாகி வைரலாகின. அதெல்லாம் நிகழ்ச்சி ஒன்றில் எடுக்கப்பட்ட போட்டோஸ், தேவையில்லாமல் வதந்தி பரப்பாதீங்க பிளீஸ் என முற்றுப்புள்ளி வைத்தார் அமலா பால்.
தற்போது தனிமையில் இருக்கும் அமலா பால், பூவின் வாசம் குறித்து இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை போட்டுள்ளார். பூவின் வாசம் சிலருக்கு புரிவதில்லை, அதை நாற்றும் என்று ஒதுக்குகிறார்கள் என்று இரட்டை அர்த்தத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தோழிகளுடன் கூல் போஸ் கொடுத்த விஜய் மகள்... இணையத்தில் வைரலாகும் திவ்யா சாஷா லேட்டஸ்ட் போட்டோ...!
யாருக்குமே புரியாதபடி அமலா பால் போட்டுள்ள இந்த இன்ஸ்டா பதிவின் அர்த்தம், நம்ம “மாஸ்டர்” நாயகி மாளவிகா மோகனனுக்கு மட்டும் புரிந்து விட்டது போல் தெரிகிறது. உடனே Pretty Women என்று அமலா பாலை வர்ணித்து கமெண்ட் செய்துள்ளார். ஒரு நடிகை இன்னொரு நடிகையை அழகு என புகழ்வது நடக்க கூடிய காரணமா?... அதனால் தான் மாளவிகா மோகனனின் இந்த கமெண்ட் செம்ம வைரலாகி வருகிறது.
