“15 வயசிலேயே வீட்டை விட்டு ஓடி வந்தேன்”... “அந்த நபரால் தான்”...பகீர் கிளம்பும் பிரபல நடிகையின் பிளாஷ் பேக்!
எனக்கு அப்போது 15 அல்லது 16 வயது இருக்கும் போது வீட்டை விட்டு ஓடினேன்.
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரனாவத். இந்தி திரையுலகில் கங்கனாவிற்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. தற்போது கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மணலியில் தனது குடும்பத்துடன் தங்கியுள்ளார்.
இதையும் படிங்க: தோழிகளுடன் கூல் போஸ் கொடுத்த விஜய் மகள்... இணையத்தில் வைரலாகும் திவ்யா சாஷா லேட்டஸ்ட் போட்டோ...!
வீட்டில் இருந்த படியே தனது ரசிகர்களுடன் சோசியல் மீடியா மூலம் இணைந்துள்ள கங்கனா ரனாவத், தனது பிளாஷ் பேக் குறித்த வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். பாலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவரான கங்கனா, தனது இளமை பருவம் குறித்து பகிர்ந்துள்ள பகீர் தகவல்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: எவ்வளவு பட்டாலும் திருந்தாத சீனர்கள்... சீனாவில் மீண்டும் களைகட்டும் வவ்வால், நாய், பாம்பு விற்பனை...!
எனக்கு அப்போது 15 அல்லது 16 வயது இருக்கும் போது வீட்டை விட்டு ஓடினேன். சினிமாவில் நடிக்க ஆரம்பித்தேன். அப்படி நடிக்க ஆரம்பித்த 2 ஆண்டுகளுக்குள் போதைக்கு அடிமையானேன். அப்போது என் வாழ்க்கை நன்றாக இல்லை. என்னுடன் இருந்த சிலரிடம் இருந்து மரணம் மட்டுமே என்னை காப்பாற்ற முடியும் என்று நம்பினேன் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: சிம்புவுடன் ஓவர் நெருக்கமாக இருக்கும் ஹன்சிகா... வைரலாகும் "மஹா" போட்டோவால் குஷியான ரசிகர்கள்...!
அப்படி தனது டீன் ஏஜ் வாழ்க்கை சீர்குலைந்து கொண்டிருந்த போது தான் நல்ல நண்பர் ஒருவர் அறிமுகமானார். அவர் எனக்கு யோகாவை அறிமுகம் செய்து வைத்தார். அதன் பின்னர் சுவாமி விவேகானந்தரை என் குருவாக ஏற்றுக்கொண்டேன். எனக்கு மன உறுதி கிடைத்ததற்கு ஆன்மீக வழிகாட்டுதல் தான் உதவியது என்று தெரிவித்துள்ளார்.