நடிகர் விஜய், சங்கீதா தம்பதிக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும், திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளனர். தல அஜித்தை போலவே தளபதி விஜய்யும் தனது பிள்ளைகள் மீது மீடியா வெளிச்சம் படாமல் பார்த்துக்கொள்கிறார்கள். விஜய்யின் மகன் அல்லது மகளின் புகைப்படங்களை எப்போதாவது தான் சோசியல் மீடியாவில் காண முடியும். அப்படி ஏதாவது ஒரு போட்டோ கிடைத்துவிட்டால் விஜய் ரசிகர்கள் அதை வைரலாக்கி விடுகின்றனர். 

இதையும் படிங்க: அரைகுறை ஆடையில் நீச்சல் குளத்தில் ஆட்டம்... பிக்பாஸ் சாக்‌ஷியை மரண பங்கம் செய்யும் நெட்டிசன்கள்...!

தளபதி விஜய்யின் செல்ல மகள் திவ்யா சாஷா சென்னையில் உள்ள சர்வதேச பள்ளி ஒன்றில் படித்து வருகிறார். அங்கு தனது தோழிகளுடன் திவ்யா சாஷா எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது. 

இதையும் படிங்க: சிம்புவுடன் ஓவர் நெருக்கமாக இருக்கும் ஹன்சிகா... வைரலாகும் "மஹா" போட்டோவால் குஷியான ரசிகர்கள்...!

அந்த போட்டோவை பார்க்கும் போது பள்ளியின் விளையாட்டு போட்டியின் போது எடுக்கப்பட்டதை போல தெரிகிறது. அரை டவுசர், டீசர்ட் சகிதமாக உட்கார்த்திருக்கும் அந்த போட்டோ சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது. இறுதியாக திவ்யா சாஷா அப்பா விஜய்யுடன் சேர்ந்து தெறி படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.