பிரபல வில்லன், மற்றும் குணச்சித்திர நடிகர் மன்சூர் அலிகான், ஆடியோ மூலம், தமிழக அரசிற்கும், ஓடிடி விவகாரம் குறித்து தன்னுடைய கருத்தையும் தெரிவித்துள்ளார்.

இதில் அவர் கூறியுள்ளதாவது, தமிழக அரசுக்கு நடிகர் மன்சூர் அலிகானின் தாழ்மையான வேண்டுகோள்... 'ஐயா, மரியாதைக்குரிய முதல்வர் அவர்களே, துணை முதல்வர்கள் அவர்களே', டாஸ்மார்க் கடைகள் அனைத்தையும் திறந்து விட்டீர்கள், தியேட்டர்களை ஏன் திறந்து விட மாட்டேன் என்கிறீர்கள்?

திரையரங்குகளை திறந்து விடுங்கள், மக்கள் பொழுது போக்கிற்கு முக்கியமான ஒரு அங்கமாக இருக்கிறது, உணர்ச்சிகளுக்கு வடிகாலாய் இருக்கிறது. அனைவரும் தற்கொலை செய்து கொண்டு இறக்கிறார்கள். எனவே இது மிகவும் அவசியமான ஒன்று, இல்லையென்றால் கடுமையான போராட்டம் பண்ண வேண்டியதாக இருக்கும். ஒன்று தியேட்டர்களை திறந்து விடுங்கள் அல்லது அணைத்து டாஸ்மார்க் கடைகளையும் மூடுங்கள்.

மேலும் செய்திகள்: 'மாயி' பட நடிகை மின்னல் தீபாவிற்கு நடந்த இரண்டாவது திருமணம்..! அழகிய ஜோடிகளின் புகைப்படங்கள் இதோ...
 

அடுத்ததாக இந்த ஓடிடி நிறுவனம் எங்கு இருக்கிறது. வெறும் சூர்யா படம், ஜோதிகா படம் மற்றும் பெரிய ஆட்களின் படங்களை மட்டுமே ஓடிடியில் வெளியிடுகிறார்கள் என்றால், அந்த ஓடிடியும் வேண்டாம் ஒரு வெங்காயமும் வேண்டாம். அணைத்து நடிகர்களின் படங்களையும் போடுங்கள், தான் தயாரித்த 'கடம்பன் பாறை' எடுத்து வைத்து 2 வருடம் ஆகிறது. படத்தை ரிலீஸ் செய்ய தியேட்டர் இல்லை, எனவே ஓடிடியில் என்டர்டெயின்மெண்ட் படங்களை ரிலீஸ் செய்யுங்கள் என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்: 'அனுஷ்கா ஷர்மா கர்ப்பமாக இருக்கும் செய்தியை வெளியிட்ட விராட் கோலி..! குவியும் வாழ்த்து...
 

பெரிய ஆள்களின் படங்கள் தான் போடுவேன் என நீங்கள் கூறினால், மக்கள் அனைவரும் பெரிய நடிகர்கள் படங்கள் தான் பார்ப்பேன் என அடம் பிடித்து கொண்டு அமர்ந்திருக்கிறார்களா? ஒன்னு ஓடிடியில் அணைத்து படங்களையும் போட்டு, நல்ல படங்களை தேர்வு செய்து வெளியிட வேண்டும். அப்படி இல்லை என்றால் ஓடிடியும் வேண்டாம் ஒரு புடலங்களையும் வேண்டாம்... இண்டஸ்ட்ரியில் உள்ளவர்கள் யாருமே இதற்க்கு குரல் கொடுக்காமல் இருப்பது சரி இல்லை என்றும், அரசாங்கத்தை கேள்வி கேட்பதும் மக்களின் கடமை அது போல் ஒரு சாதாரண மனிதனாக நான் கேள்வி கேட்கிறேன் என தெரிவித்துள்ளார் மன்சூர் அலிகான்.

மேலும் செய்திகள்: 'பிகில்' பாண்டியம்மாவா இது? மணப்பெண் கெட்டப்பில் அசத்தும் ரோபோ சங்கர் மகள்... அசத்தல் புகைப்படங்கள்!
 

பஸ் சேவை, ரயில் சேவை ஆகியவற்றை திறந்து விட வேண்டும், முக கவசம் போட்டால் தான் கொரோனா வராது என கூறுகிறீர்கள், பின்னர் ஏன் அனைத்தையும் முடக்கி வைத்திருக்கிறீர்கள், தங்களால் முடியவில்லை எனவே அனைத்தையும் திறந்து விடுமாறும் தன்னுடைய ஆடியோவில் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.