பிரபல இந்திய கிரிக்கெட் வீரரும், பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவின் காதல் கணவருமான விராட் கோலி, தங்களுக்கு குழந்தை பிறக்க உள்ள மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார்.

அனுஷ்கா ஷர்மா மற்றும் விராட் கோலி இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து, படங்களில் நடிக்கவும்,தயாரிக்கவும் கவனம் செலுத்தி வந்த அனுஷ்கா குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளி போட்டு கொண்டே சென்றார்.

இருப்பினும் இவர்களுடைய ரசிகர்கள் தொடர்ந்து, அனுஷ்கா எப்போது குழந்தை பெற்று கொள்வார் என்கிற கேள்வியை தொடர்ந்து எழுப்பி வந்தனர். அவ்வப்போது, விராட் கோலியின் ரசிகர்கள் அனுஷ்கா ஷர்மா கர்ப்பமாக இருப்பது போல் போட்டோ ஷாப் செய்து அந்த புகைப்படங்களையும் வைரலாக்கி உள்ளனர்.

இந்நிலையில், அனுஷ்கா ஷர்மா - விராட் கோலி தம்பதி திடீர் என யாரும் எதிர்பாராத விதமாக அனுஷ்கா ஷர்மா கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, ஜனவரி 2021 ஆம் ஆண்டு தங்களுடைய குடும்பத்திற்க்கு வரும் மூன்றாவது நபர் குறித்து வெளிப்படுத்தியுள்ளனர். 

இந்த தகவல் பற்றி அறிந்த, அனுஷ்கா - விராட் கோலி ரசிகர்கள் தொடர்ந்து இவர்களுக்கு வாழ்த்து மழையை தெரிவித்து வருகிறார்கள்

View this post on Instagram

And then, we were three! Arriving Jan 2021 ❤️🙏

A post shared by Virat Kohli (@virat.kohli) on Aug 26, 2020 at 10:32pm PDT