லியோ படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை மெர்சலாக்கிய பிரபலம் - வைரலாகும் வீடியோ

லியோ படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில், தற்போது அப்படத்தின் மேக்கிங் வீடியோவை ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா வெளியிட்டு இருக்கிறார்.

Manoj paramahamsa shares Thalapathy vijay Leo movie making video from kashmir

விஜய் நடிக்கும் லியோ படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும் வில்லன்களாக சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், மிஷ்கின் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இதுதவிர பிக்பாஸ் பிரபலங்களான ஜனனி, அபிராமி வெங்கடாசலம், சாண்டி மாஸ்டர் மற்றும் மலையாள நடிகை பிரியா ஆனந்த், நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோரும் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

லியோ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை கடந்த ஜனவரி மாதம் தமிழ்நாட்டில் நடத்தி முடித்த படக்குழு தற்போது அடுத்தகட்ட ஷூட்டிங்கை காஷ்மீரில் நடத்தி வருகின்றனர். இதற்காக தனி விமானம் மூலம் காஷ்மீருக்கு பறந்த படக்குழு, அங்கு முழுவீச்சில் ஷூட்டிங்கை நடத்தி வருகின்றனர். கிட்டத்தட்ட 2 மாதங்கள் படப்பிடிப்பை அங்கு நடத்திவிட்டு இந்த மாத இறுதியில் மீண்டும் சென்னைக்கு திரும்ப உள்ளனர்.

இதையும் படியுங்கள்... ஷூட்டிங்கில் விபத்து! அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியல... நூலிழையில் உயிர்தப்பிய ஏ.ஆர்.ரகுமான் மகன் அமீன்

லியோ படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில், அங்கிருந்து அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், தற்போது அப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியிட்டு முக்கிய அப்டேட் ஒன்றையும் கொடுத்துள்ளார் லியோ படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா. அதன்படி லியோ படத்தின் பயன்படுத்தப்பட்டு வரும் அதிநவீன கேமரா குறித்து ஸ்பெஷல் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் மனோஜ்.

V RAPTOR XL என்கிற அதிநவீன கேமரா தான் லியோ படத்தில் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இதைவைத்து லியோ படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு முன் விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் பணியாற்றியபோது மோகோபாட் என்கிற கேமராவை பயன்படுத்தி அசத்தி இருந்தார். அந்த கேமரா பின்னர் கமலின் விக்ரம் மற்றும் சிவகார்த்திகேயனின் மாவீரன் போன்ற படங்களில் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... விஷால் படத்தில் இணைந்த செல்வராகவன்... அதுவும் சூப்பர்ஸ்டார் பெயரில் நடிக்கிறாராம் - வெளியான வேறலெவல் போஸ்டர்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios