பிரபல நடிகர் அதிர்ச்சி மரணம்! பிரபலங்கள் இரங்கல்!
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பழம்பெரும் நடிகர் சி.வி.தேவ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலையாள திரையுலகை சேர்ந்த, பழம்பெரும் நடிகர் சி.வி.தேவ், 100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் நாடகங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர். 83 வயதாகும் இவர் உடல்நல குறைவு காரணமாகவும், வயது மூப்பு காரணமாகவும் அவதிப்பட்டு வந்த நிலையில்... கேரள மாநிலம், கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி ஓரிரு நாட்களுக்கு முன் உயிரிழந்தார். இவரது மரணம் கேரள திரையுலகை சேர்ந்த பிரபலங்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இவர் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் பிரபலமான நாடகங்களில் நடித்துள்ளார். மேடை நாடகங்களில் நடித்து வந்த இவர், பின்னர் தொருஹி என்கிற மலையாள படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். சுமார் 100-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துளளார்.
குறிப்பாக.. சத்யம், பட்டாபிஷேகம், மனசினகரே, கதை வரம், மிழி டூண்டும், நேர்க் கிராஜ் போன்ற படங்களில் குறிப்பிடத்தக்க வேடங்களில் நடித்துள்ளார். மம்மூட்டி, மோகன் லால் போன்ற முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். இவரின் மறைவுக்கு... கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.