கடந்த வாரம் வெளியான 'உப்பெனா' திரைப்படம்,  சூப்பர் ஹிட் வெற்றிப்படம் என ரசிகர்கள் மற்றும் பிரபலங்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த படத்தின் இயக்குனர் புஜ்ஜிபாபுவை தாறுமாறாக புகழ்ந்து வருகின்றனர் தெலுங்கு திரையுலகை சேர்ந்தவர்கள். 

மேலும் செய்திகள்: வாவ்... அச்சு அசல் அம்மாவை போலவே இருக்கும் நடிகை தேவயானி மகள்! தாறுமாறாக வைரலாகும் புகைப்படம்!
 

அறிமுக நடிகர், நடிகைகளை வைத்து எடுத்துள்ள இந்த திரைப்படம் ஒரே வாரத்தில் மட்டும் சுமார் 70 கோடி வசூலை குவித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு, தமிழ், திரையுலகை சேர்ந்த டாப் ஸ்டார் நடிகர்கள் முதல், ரசிகர்கள் அனைவரும் பாராட்டி வரும் இந்தப் படத்தில் நாயகன் - நாயகிக்கு நிகரான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருந்தார் விஜய்சேதுபதி.

எனவே விஜய்சேதுபதிக்கு இந்தப் படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்கள் பலர் உருவாக்கியுள்ளனர்.  இந்த படத்தை பார்த்த நடிகர் மகேஷ் பாபு படக்குழுவினர் அனைவரையும் வெகுவாக பாராட்டி விட்டு, விஜய் சேதுபதியை பற்றி மட்டும் ஒரு வார்த்தை கூட சொல்லாதது ஏன்?  என ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: திடீர் என தேசிய அளவில் ட்ரெண்ட் ஆன அட்லீ பெயர்..! காரணம் தளபதியா?
 

இதுகுறித்து சமீபத்தில் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட மகேஷ்பாபு, உப்பெனா படத்தை பற்றி ஒரே வார்த்தையில் கிளாசிக் என பாராட்டியிருந்தார். இயக்குனர் புஜ்ஜிபாபு காலத்தால் மறக்க முடியாத ஒரு காவியத்தை கொடுத்துள்ளதாகவும், தேவிஸ்ரீ பிரசாத்தின் இசை மிக சிறப்பாக இருந்ததாகவும் தெரிவித்திருந்தார். மேலும் இரண்டு புதுமுகங்களான வைஷ்ணவ் தேஜ் - கீர்த்தி ஆகியா இருவருமே ஸ்டார் என புகழ்ந்து, ஒட்டுமொத்த படக்குழுவினருக்குமே தன்னுடைய பாராட்டுகளை தெரிவித்திருந்தார்.

மேலும் செய்திகள்:புதிய காதலனுடன் ஸ்ருதிஹாசன்..! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!
 

மேலும் செய்திகள்: கண்ணீர் விட்டு கதறிய வடிவேலு... அடித்தது ஜாக்பாட்! இனி காமெடி சரவெடித்தான்..!
 

நாயகன் - நாயகிக்கு இந்த படத்தில் எந்த அளவுக்கு முக்கியத்துவம் இருந்ததோ அதே அளவுக்கு சூப்பர் ஹிட் வில்லனாக நடித்த விஜய் சேதுபதிக்கும் முக்கியத்தும் கொடுக்கப்பட்டிருந்தது. எனவே மகேஷ்பாபு விஜய் சேதுபதியை பாராட்ட மறந்து விட்டாரா? என கேள்விகளுடன் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.