வாவ்... அச்சு அசல் அம்மாவை போலவே இருக்கும் நடிகை தேவயானி மகள்! தாறுமாறாக வைரலாகும் புகைப்படம்!
தமிழ் சினிமாவில் அஜித், விஜய், விக்ரம் என பிரபல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை தேவயானி, அவரது மகளுடன் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படம் பார்பவர்களையே ஆச்சர்யப்படுத்தியுள்ளது. ஆளே அடையாளம் தெரியாமல் வளர்ந்திருக்கும் இவரது மகள் இனியா... அச்சு அசல் அம்மாவை போல் இருக்கிறார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
நடிகை தேவயானி மும்பையை பூர்வீகமாக் கொண்டவர் என்றாலும், அவருக்கு கை கொடுத்து தூக்கி விட்டது தமிழில் சினிமா தான்.
பார்க்கவே பக்கத்துக்கு வீட்டு பெண் போல் தோன்றும் எதார்த்தமான அழகு, இவரை சூப்பர் ஹிட் ஹீரோயினாக மாற்றியது. காதல் கோட்டை, சூர்யவம்வம், நீ வருவாய் என 75 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
வெள்ளித்திரையில் இருந்து திருமணம் ஆகி விலகிய பின்னர், சின்னத் திரையிலும் வெற்றி நாயகியாக வலம் வந்தார். எனவே தான் தற்போது 'சித்தி 2 ' சீரியலில் இருந்து ராதிகா விலகி விட்டதால், அவருக்கு பதில் தேவயானி நடிக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
தேவயானி 'விண்ணுக்கும் மண்ணுக்கும்' என்ற படத்தில் நடிக்கும் போது, இந்த படத்தின் இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து வந்தார். தாய், தந்தையரின் எதிர்ப்பை மீறி நடிகை தேவயானி ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
தற்போது இந்த தம்பதிகளுக்கு, இனியா, பிரியங்கா என இரண்டு மகள்கள் உள்ளனர்.
அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் மகள்களுடன் எடுத்து கொள்ளும் புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் தேவயானி, தற்போது விசேஷம் ஒன்றில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இதில் கணவர் மகளுடன் இவர் எடுத்து கொண்ட புகைப்படமும் உள்ளது. குறிப்பாக தேவயானியின் மகளை பார்த்து ரசிகர்கள், அச்சு அசல் அம்மாவை போலவே இருக்கும் இவர், இப்படி வளர்ந்து விட்டாரே என கூறி வருகிறார்கள். இந்த புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.