நடிகர் தனுஷின் குபேரா படம் திரையரங்குகளில் சக்கைப்போடு போட்டு வரும் நிலையில், அதற்கு போட்டியாக வருகிற ஜூன் 27ந் தேதி வெளியாக உள்ள படங்கள் பற்றி பார்க்கலாம்.
June 27 Theatre Release Movies : ஜூன் மாதத்தின் முதல் இரண்டு வாரம் தமிழ் சினிமாவுக்கு ஏமாற்றமானதாக அமைந்திருந்தது. இதையடுத்து ஆறுதல் கொடுக்கும் விதமாக தனுஷின் குபேரா திரைப்படம் கடந்த ஜூன் 20ந் தேதி திரைக்கு வந்தது. அப்படம் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் வசூலையும் வாரிக்குவித்து வருகிறது. இந்த நிலையில், அப்படத்தின் வசூல் வேட்டைக்கு ஆப்பு வைக்க வருகிற ஜூன் 27ந் தேதி சில முன்னணி நடிகர்களின் படங்கள் திரைக்கு வர உள்ளன. அது என்னென்ன படங்கள் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மார்கன்
லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள திரைப்படம் மார்கன். இப்படத்தில் விஜய் ஆண்டனி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அவருடன் சமுத்திரக்கனி, பிரிகிடா, பிரிதிகா, கலக்கப்போவது யாரு அர்ச்சனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் அஜய் திஷா வில்லனாக நடித்திருக்கிறார். இப்படம் வருகிற ஜூன் 27ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளதோடு, இப்படத்தை தன்னுடைய மனைவி உடன் சேர்ந்து தயாரித்தும் உள்ளார். இப்படத்தின் இயக்குனர் லியோ ஜான் பால் தான் இப்படத்தில் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றி உள்ளார்.

லவ் மேரேஜ்
விக்ரம் பிரபு நாயகனாக நடித்துள்ள திரைப்படம் லவ் மேரேஜ். இப்படத்தை ஷண்முகப் பிரியன் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி உள்ளார். இதற்கு முன்னர் இயக்குனர் ஆனந்த் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ள இவர், தமிழில் இயக்கும் முதல் படம் இதுவாகும். இப்படத்தில் விக்ரம் பிரபு ஜோடியாக சுஸ்மிதா பட் நடித்துள்ளார். இப்படத்தில் ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜராஜ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர் சத்யராஜும் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். இப்படம் ஜூன் 27ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்து உள்ளார்.

கண்ணப்பா
ஷிவ பக்தரான கண்ணப்பாவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி உள்ள புராணக் கதையம்சம் கொண்ட படம் தான் கண்ணப்பா. இப்படத்தை முகேஷ் குமார் இயக்கி உள்ளார். இப்படத்தில் விஷ்ணு மஞ்சு நாயகனாக நடித்துள்ளார். மேலும் மோகன்பாபு, சரத்குமார், கருணாஸ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்தில் மோகன்லால், பிரபாஸ், காஜல் அகர்வால் ஆகியோர் கேமியோ ரோலில் நடித்துள்ளார்கள். இப்படமும் வருகி ஜூன் 27ந் தேதி பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ளது. 200 கோடி பட்ஜெட்டில் தயாராகி உள்ள இப்படத்திற்கு ஸ்டீபன் தேவஸி இசையமைத்து உள்ளார்.

மா
மா என்கிற திகில் படமும் வருகிற ஜூன் 27ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்திப்படமான இதில் நடிகை கஜோல் கதையின் நாயகியாக நடித்துள்ளார். விஷால் ஃபுனா இப்படத்தை இயக்கி உள்ளார். அஜய் தேவ்கன் தயாரித்துள்ள இப்படத்திற்கு 3 பேர் இசையமைத்துள்ளனர். இப்படத்தின் டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து உள்ளது.
