அப்போ மாநாடு 2 லோடிங்கா? இரண்டாம் ஆண்டு கொண்டாடத்தில் STR பகிர்ந்த ட்வீட் வைரல் - வெங்கட் சொன்ன பதில் என்ன?

Two Years of Maanadu : கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட்டான திரைப்படம் தான் மாநாடு. நேற்று நவம்பர் 25ம் இந்த திரைப்படத்தின் இரண்டாம் ஆண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றது.

Loop Continues Director Venkat Prabhu tweet for Actor Simbu Tweet on 2 years of Maanaadu ans

பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் மற்றும் நடிப்பு அரக்கன் எஸ்.ஜே சூர்யா இணைந்து நடித்து வெளியான திரைப்படம் தான் மாநாடு. எஸ்.எஸ்.ஐ புரோடக்சன் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் காமாட்சி இந்த திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டு இருந்தார். முன்னதாக இந்த திரைப்படம் சிம்புவின் கால்ஷீட் பிரச்சனை காரணமாக தடைபட்டதாக செய்திகள் வெளியானது. 

சுமார் ஒரு வருட போராட்டத்திற்கு பிறகு படப்பிடிப்பு பணிகள் முடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் பெற்றது. இந்நிலையில் நேற்று நவம்பர் 25ம் தேதி இந்த திரைப்படத்தின் இரண்டாம் ஆண்டு கொண்டாடுங்கள் நடைபெற்ற நிலையில், இது குறித்து ஒரு ட்வீட் போட்டிருந்தார் இந்த படத்தின் நாயகன் சிலம்பரசன். 

Jailer Vs Leo: சூப்பர் ஸ்டாரின் ஜெயிலரிடம்.. மோத முடியாமல் மண்ணை கவ்விய லியோ! 2023 டாப் வசூல் தலைவர் படம்!

அதில் "மாநாடு படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் முடிவடைந்தது சந்தோஷம் அளிக்கிறது, மீண்டும் ஒரு முறை அந்த டைம் லூப்பிற்குள் செல்ல ஆவலாக இருக்கிறேன், இந்த திரைப்படம் வெற்றிகரமான திரைப்படமாக மாற உதவிய அனைவருக்கும் நன்றி" என்று கூற அதற்கு இந்த திரைப்படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு அவர்கள் "Loop Continues" என்று கூறி ட்வீட் செய்துள்ளார். 

இதனால் மாநாடு படத்தின் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்புகள் இருப்பதாக இணையவாசிகள் பேசி வருகின்றனர். டைம் லூப் என்கின்ற ஒரு விஷயத்தை மிக நேர்த்தியாக கையாண்டு ஒரு சுவாரசியமான திரைப்படத்தை வெங்கட் பிரபு கொடுத்திருந்தார் என்றால் அது மிகையல்ல. இருப்பினும் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா? ஆகாதா? என்பது வெங்கட் பிரபுவிற்கு தான் வெளிச்சம். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios