Jailer Vs Leo: சூப்பர் ஸ்டாரின் ஜெயிலரிடம்.. மோத முடியாமல் மண்ணை கவ்விய லியோ! 2023 டாப் வசூல் தலைவர் படம்!
சூப்பர் ஸ்டார் பிரச்சனை ஒருபுறம் சென்று கொண்டிருப்பதால், இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த தமிழ் திரைப்படம், ஜெயிலரா அல்லது லியோவா என இருதரப்பு ரசிகர்களும் மோதிக்கொண்ட நிலையில், இந்த ஆண்டு தலைவரின் படம் தான் அதிகம் வசூல் செய்துள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளது.
Jailer
கடந்த ஆகஸ்ட் மாதம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படம், 650 கோடி வசூலித்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த படத்தின் வெற்றியை ஹிஸ்டரிக் வெற்றி என புகழ்ந்த தயாரிப்பாளர் கலாநிதி மாறன், இப்படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப் குமாருக்கு 1 கோடி மதிப்புள்ள காரை பரிசாக வழங்கியதை தொடர்ந்து, அவரின் அடுத்த படத்தை தயாரிப்பதாகவும் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. அதே போல் குறிப்பிட்ட தொகையும் பரிசாக வழங்கினார்.
அதே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு கார் மற்றும் 110 கோடி ஷேர் கொடுத்தார். இப்படத்தின் இசையமைப்பாளர் அனிரூத்துக்கும் கார் மற்றும் பணத்தை வாரி வழங்கி தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
ஜெயிலர் படத்தின் வசூலை கண்டிப்பாக தளபதியின் லியோ பீட் செய்யும் என தளபதி ரசிகர்கள் கூறி வந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் மேஜிக் இந்த முறை ரசிகர்களிடம் கொஞ்சம் ஒர்க் அவுட் ஆகவில்லை என்று தான் கூறவேண்டும். அக்டோபர் மாதம் 19ஆம் தேதி வெளியான "லியோ" திரைப்படம், முதல் நாள் சுமார் 148 கோடி ரூபாய் வசூலித்தாலும், படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்ததால் வசூல் குறைய துவங்கியது.
லியோ திரைப்படம் 12 ஆம் நாளில் மொத்தமாக 541 கோடியை கடந்து வசூலித்தது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் கடந்த அக்டோபர் 31ம் தேதி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதற்க்கு மேல் இந்த திரைப்படம் ஓடிய மூத்திலும் 600 கோடியை இன்னும் எட்டியதாக எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
Jailer box office
இந்த நிலையில், திரைப்பட வணிகவியலாளரான ரமேஷ் பாலா, தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் 2023 ஆம் ஆண்டு, தமிழகத்தில் அதிக வசூல் செய்த திரைப்படம் ஜெயிலர் என தெரிவித்துள்ளார். இரண்டாவது இடத்தில் இருக்கும் திரைப்படம் ஜெய்லரை விட 65 கோடி முதல் 75 கோடி வரை குறைவாக வசூலித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த ஆண்டில் அதுவும் தமிழகத்தில் ஜெயிலருக்கு அடுத்த இடத்தில் இருந்தால் அது கண்டிப்பாக லியோ திரைப்படம் தான் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
Jailer Movie Collection
ஏற்கனவே விஜய் - ரஜினி இடையே சூப்பர் ஸ்டார் யார் என்பதில்.. காக்கா - கழுகு கதை ஓடி கொண்டிருக்கும் நிலையில், இந்த தகவலை சுட்டி காட்டி ரஜினிகாந்தின் ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் எப்போதுமே தலைவர் தான் என ஆர்ப்பரித்து வருகிறார்கள்.