Asianet News TamilAsianet News Tamil

தேர்தல் திருவிழாவால் புதிய படங்கள் திரைக்கு வராதா? சினிமா ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்..

இந்த ஆண்டு ஏப்ரல் 19 தேதி தமிழகத்தில் மக்களாஇ தேர்தல் நடைபெற உள்ளதால் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14-ம் தேடி புதிய படங்கள் வெளியாக வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

Loksabha Elections 2024 : New films wont be release for tamil newyear due to election Rya
Author
First Published Mar 18, 2024, 11:56 AM IST

2024-ம் ஆண்டு மக்களவை தேதி பற்றிய அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று முன் தினம் வெளியிட்டது. அதன்படி வரும் ஏப்ரல் 19 முதல் ஜூன் வரை 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. தமிழகத்தை பொறுத்த வரை முதல் கட்டத்திலேயே அதாவது ஏப்ரல் 19-ம் தேதியே ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. 

தமிழ் சினிமா வெளியீட்டை பொறுத்த வரை தீபாவளி, பொங்கலுக்கு அடுத்த படியாக தமிழ் புத்தாண்டு நாள் முக்கியமான வெளியீட்டு தேதியாகும். பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தொடங்கும் காலம் என்பதால் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அதிக படங்கள் வெளியாகும். ஆனால் இந்த ஆண்டு ஏப்ரல் 19 தேதி தமிழகத்தில் மக்களாஇ தேர்தல் நடைபெற உள்ளதால் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14-ம் தேடி புதிய படங்கள் வெளியாக வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

ஆண்களுக்கு பிடிச்சா அது காதல்.. நாங்கள் பிடிக்கலன்னு சொன்னா அது வேறயா? கொந்தளித்த பிரபல நடிகை..

தேர்தல் முடிந்த உடன் ஒரு வாரத்திற்கு பின் ஏப்ரல் 26-ம் தேதி புதிய படங்கள் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனாலும் தமிழ் படங்கள் நன்றாக ஓடும் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திராவிலும் அடுத்தடுத்த வாரங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. கேரளாவில் ஏப்ரல் 26-ம் தேதி ஒரே கட்டமாகவும், கர்நாடகாவில் ஏப்ரல் 26, மே 7 என இரண்டு கட்டங்களாவும் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அதே போல் ஆந்திரா தெலங்கானாவில் ஒரே கட்டமாக மே 13-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 

மலையாள படத்தில் நடிக்க படையெடுக்கும் கோலிவுட் ஸ்டார்ஸ்... அனுஷ்கா & கோட் பட நடிகருக்கு கிடைத்த அடிபொலி சான்ஸ்

இப்படி ஏப்ரல் 14 முதல் மே 13 வரை ஒரு மாத காலம் தென்னியாவில் மக்களவை தேர்தல் நடைபெறுவதால் அரசியல் களம் பரபரப்பாக காணப்படும். எனவே இந்த ஒரு மாத காலத்திற்கு தமிழ் மட்டுமின்றி, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் புதிய படங்களை வெளியிட தயக்கம் காட்டுவார்கள். மே 13-க்கு பிறகே புதிய படங்களின் வெளியீட்டு தேதியை முடிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் அதே காலக்கட்டத்தில் ஐபிஎல் போட்டிகளும் நடைபெறும் என்பதால், இந்த ஆண்டு கோடை காலம் சினிமாவை பொறுத்த வரை கொஞ்சம் டல்லாகவே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios