Asianet News TamilAsianet News Tamil

Leo Fever : கோலிவுட் படங்கள் இதுவரை செய்த உலகளாவிய சாதனைகளை லியோ முறியடிக்குமா..?

லியோ படத்தின் ட்ரெயலர், பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இந்த படம் ஏற்கனவே தமிழ் படங்கள் செய்த சாதனைகளை தகர்க்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது..

Leo Fever : Will Leo break the current world wide records of Kollywood films? read full story here Rya
Author
First Published Oct 14, 2023, 6:44 PM IST | Last Updated Oct 14, 2023, 6:44 PM IST

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் லியோ. இப்படம் அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யுடன் த்ரிஷா இப்படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார். லியோ படத்தின் ட்ரெயலர், பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதனால் லியோ படம் வெளியாவதற்கு முன்பே படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது என்பது உலகம் முழுவதும் குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங் விற்பனையால் தெளிவாகத் தெரிகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இருப்பினும், லியோ படம், இதுவரை கோலிவுட்டில் வெளியான படங்களில் ஒரு சிறந்த திரைப்படமாக மாறுவதற்கு சில வரையறைகளையும் இலக்குகளையும் கொண்டுள்ளது. எனவே கோலிவுட்டில் வெளியான பல படங்கள் செய்த வசூல் சாதனைகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இந்த சாதனைகளை லியோ தகர்க்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தில் முதல் நாள் வசூலில் சாதனை படைத்த திரைப்படங்கள் :

வலிமை- ரூ 36.17 கோடி (முதல் நாள் வசூல்)

அண்ணாத்தே-ரூ 34.92 கோடி முதல் நாள் வசூல்)

2.0- ரூ 33.58 கோடி (முதல் நாள் வசூல்)

உலகளவில் முதல்நாள் வசூலில் சாதனை படைத்த படங்கள்

2.0 ரூ 117.24 கோடி

கபாலி- ரூ 105.70 கோடி

ஜெயிலர்- ரூ 95.78 கோடி

உலகளவில் அதிக வசூல் செய்த தமிழ் படங்கள்

2.0 - ரூ 800 கோடி

ஜெயிலர் - ரூ.650 கோடி

பொன்னியின் செல்வன் - 500 கோடி.

ஆனால் மேற்கூறிய இந்த சாதனைகளை லியோ தகர்த்து புதிய சாதனைகளை படைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். லியோ படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், பிரியா ஆனந்த், கிரண் ரத்தோர், சாண்டி மாஸ்டர், பாபு ஆண்டனி, ஜார்ஜ் மேரியன், அபிராமி வெங்கடாசலம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ பேனரில் எஸ்.எஸ்.லலித் குமார் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து லியோ படத்தை தயாரித்துள்ளனர். பிலோமின் ராஜ் இப்படத்திற்கு எடிட்டிங் செய்துள்ளார், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். 

46 ஆண்டுகளுக்கு பிறகு.. ரஜினிக்கும் திருநெல்வேலிக்கும் இடையே ஒரு ஸ்பெஷல் கனெக்‌ஷன் இருக்கு.. என்ன தெரியுமா?

மறுபுறம், தனது முதல் படமான மாநகரம் படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த லோகேஷ் கனகராஜ், கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து மோஸ்ட் வாண்டட் இயக்குனர்களில் ஒருவராக மாறி உள்ளார். லியோ படத்தை தொடர்ந்து ரஜினியின் 171-வது படத்தை இயக்க உள்ளார். லோகேஷ் கனகராஜ் தலைவர் 171 திரைப்படத்தை ஒரு தனித் திரைப்படமாக இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இப்படம் LCU இன் ஒரு பகுதியாக இருக்காது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஜினிகாந்த் நடிக்கும் படம் ஒரு நேர்த்தியான ஆக்‌ஷன் த்ரில்லராக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios