46 ஆண்டுகளுக்கு பிறகு.. ரஜினிக்கும் திருநெல்வேலிக்கும் இடையே ஒரு ஸ்பெஷல் கனெக்ஷன் இருக்கு.. என்ன தெரியுமா?
நெல்லையில் உள்ள பணகுடி என்ற ஊரில் தற்போது ரஜினி படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அங்குள்ள ஓடுகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தனது புதிய படத்தின் படப்பிடிப்பில் ரஜினி ஈடுபட்டுள்ளார்.
நெல்சன் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் 600 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது ரஜினி TJ ஞானவேல் இயக்கத்தில் நடித்து வருகிறார்.இப்படடத்தில் அமிதாப் பச்சன், ராணா டகுபதி, பகத் ஃபாசில், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
தற்காலிகமாக தலைவர் 170 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பில் ரஜினி பிசியாக இருக்கிறார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு தலைவர் 170 படக்குழு தற்போது திருநெல்வேலிக்கு சென்றுள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
நெல்லையில் உள்ள பணகுடி என்ற ஊரில் தற்போது ரஜினி படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அங்குள்ள ஓடுகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தனது புதிய படத்தின் படப்பிடிப்பில் ரஜினி ஈடுபட்டுள்ளார். கன்னியாகுமரியில் உள்ள ஹோட்டலில் தங்கி இருக்கும் ரஜினி, படப்பிடிப்பிற்காக தினமும் பணகுடி சென்று வருகிறார்.கடந்த நான்கு நாட்களாக படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், சூப்பர் ஸ்டாரைப் பார்ப்பதற்காக ரசிகர்கள் தினமும் காலையில் அப்பகுதியில் கூடுகின்றனர்.
இந்த நிலையில் தலைவர் 170 படப்பிடிப்பில் தனது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டாராம். 46 வருடங்களுக்கு பிறகு படப்பிடிப்புக்காக திருநெல்வேலிக்கு வந்துள்ளதாக ரஜினி கூறியுள்ளார். SP முத்துராமன் இயக்கிய புவனா ஒரு கேள்வி குறி என்ற தமிழ் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக 1977 ஆம் ஆண்டு நெல்லைக்கு வந்ததாகவும், அதன்பிறகு தற்போது தான் நெல்லைக்கு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
1988 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த ராஜாதி ராஜா திரைப்படம் திருநெல்வேலி மாவட்டம் மற்றும் தூத்துக்குடி, தென்காசி மற்றும் நாகர்கோவிலில் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் திரைப்படங்களை வெளியிடுவது என்பது இப்போது பொதுவான நிகழ்வு தான். ஆனால் திருநெல்வேலி போன்ற நகரங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட திரையரங்குகளில், ரஜினிகாந்த் படங்கள் தான் முதன்முதலில் திரையிடப்பட்டது.
1983 இல், ரஜினிகாந்தின் அடுத்த வாரிசு திரைப்படம் திருநெல்வேலியில் 2 திரையரங்குகளில் திரையிடப்பட்டது - சென்ட்ரல் மற்றும் பாப்புலர் என்ற 2 திரையரங்குகளும், ஒரே நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில், திரைப்படங்கள் ஃபிலிம் ரீல்கள் மூலம் வழங்கப்பட்டன. இந்த இரண்டு திரையரங்குகளிலும் அடுத்த வாரிசு படம் 30 நிமிட இடைவெளியில் திரையிடப்பட்டது.
அதே போல் வெவ்வேறு நிறுவனங்களின் கீழ் செயல்பட்டும் 2 திரையரங்குகளில் ஒரே திரைப்படம் திரையிடப்பட்டதும் ரஜினி படம். 1995 ஆம் ஆண்டில், ரஜினிகாந்தின் முத்து திரைப்படம் ஒரே நேரத்தில் திருநெல்வேலியில் கணேஷ் மற்றும் பேரின்ப விலாஸ் என இரண்டு திரையரங்குகளில் திரையிடப்பட்டது. இந்த படம் இரண்டு திரையரங்குகளிலும் வெற்றிகரமாக 100 நாள் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.
தனது 48 ஆண்டு கால திரையுலக வாழ்க்கையில், 169 படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் ரஜினி. லைகா நிறுவனம் தயாரிக்கும் தலைவர் 170 படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் கொத்தடிமைத் தொழிலாளர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் விடுதலைப் போராட்டத்தை மையமாகக் கொண்டது என்று கூறப்படுகிறது. இந்த படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிக்க உள்ளார். தலைவர் 171 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்திற்கும் அனிருத் இசையமைக்கிறார்.
- thalaivar
- thalaivar 170
- thalaivar 170 announcement
- thalaivar 170 cast
- thalaivar 170 cast update
- thalaivar 170 director
- thalaivar 170 exclusive update
- thalaivar 170 first look
- thalaivar 170 latest update
- thalaivar 170 lyca
- thalaivar 170 massive update
- thalaivar 170 movie
- thalaivar 170 pooja
- thalaivar 170 release date
- thalaivar 170 teaser
- thalaivar 170 title
- thalaivar 170 trailer
- thalaivar 170 update
- thalaivar 170 updates
- thalaivar 171