வனிதா - பீட்டர் பால் திருமண விவகாரம் குறித்து சோசியல் மீடியாவில் ஆதரவாகவும் எதிராகவும் பல கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் பேட்டி ஒன்றின் போது வனிதா, பீட்டர் பால் லிப்லாக் போட்டோ ஒன்று வெளியாகியுள்ளது. அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இயக்குநரும், நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன் வனிதா கண்டபடி விமர்சித்து ட்வீட் செய்துள்ளார்.

 

இதையும் படிங்க: சீயான் விக்ரம் தாத்தா ஆகப் போறாராம்?... குட் நியூஸைக் கேள்விப்பட்டு குஷியான ரசிகர்கள்...!

கடந்த சில நாட்களுக்கு முன்பு வனிதா - பீட்டர் பால் திருமணம் குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அவர் ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளவர். இன்னும் விவாகரத்து செய்யவில்லை. அப்படியிருக்கும்போது படிப்பு, புகழ் மற்றும் தைரியமுள்ள ஒரு பெண் எப்படி இந்த தவறை செய்திருப்பார் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். மேலும் இந்த திருமணம் முடியும் வரை முதல் மனைவி ஏன் அமைதியாக இருந்தார். திருமணத்தை ஏன் தடுத்து நிறுத்தவில்லை” எனக்கூறியிருந்தார். 

 

இதையும் படிங்க: நீச்சல் உடையில் தமன்னா... இதுவரை யாரும் பார்த்திடாத ஹாட் போட்டோ... செம்ம வைரல்...!!

இதை பார்த்த வனிதா உங்களுக்கு தேவையில்லாத விஷயத்தில் தலையிட வேண்டாம் என எச்சரிக்கும் தோணியில் பதிவிட, அந்த ட்வீட்டை நீக்கிய லட்சுமி ராமகிருஷ்ணன் உடனடியாக வனிதாவிடம் மன்னிப்பு கோரினார். இதனிடையே ஆன்லைன் லைவ் பேட்டி ஒன்றில் வனிதாவும், லட்சுமி ராமகிருஷ்ணனும் ஒன்றாக பங்கேற்றனர். அதில் வனிதாவோ, நீ என்ன பெரிய ஐகோர்ட் ஜட்ஜா?. சரி தான் போடி. உனக்கு குடும்பம் இல்லையா. நீ இயக்குநராக இருந்தால் படம் எடுடி என் வாழ்க்கையில் ஏன் தலையிடுகிற . நீ ரொம்ப பத்தினி. ஒருத்தனுக்கு ஒருத்தினு டிராமா போடாத. ஒரு புருஷன் இருப்பதால் நீ பெரிய ஒழுங்கா. என்கிட்ட பதில் சொல்லுடி, தைரியமா சொல்லுடி. நீ யாருன்னு எனக்கு தெரியும்  என லட்சுமி ராமகிருஷ்ணனை  சகட்டு மேனிக்கு கிழித்தெடுத்தார். 

இதையும் படிங்க: நிர்வாண போட்டோவை பகிர்ந்த மீரா மிதுன்...மரண பங்கம் செய்யும் நெட்டிசன்கள்...!

இந்நிலையில் இதற்கு முன்னதாக ஒரு யூ-டியூப் நேரலையின் போது வனிதா, பீட்டர் பாலுக்கு உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்தார். தற்போது மீண்டும் ஒருமுறை அதேபோல் லிப் லாக் கொடுக்கும் போட்டோ ஒன்று வெளியாகியுள்ளது. அதனை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள லட்சுமி ராமகிருஷ்ணன், இதை பார்த்தால் அந்த நபரை சட்டப்படி திருமணம் செய்து கொண்ட பெண் மற்றும் அவரது குழந்தைகளின் மனநிலை எப்படி இருக்கும் யோசியுங்கள். அவர்களுடைய பெட்ரூமில் இதையெல்லாம் செய்தால் யாரும் கண்டுகொள்ளப் போவதில்லை. இது கள்ளக் காதலை பெருமைப்படுத்தி தவறான முன்னுதாரணம் ஆக்குவது போல் உள்ளது என சகட்டுமேனிக்கு விமர்சித்துள்ளார்.