வனிதா - பீட்டர் பால் 3வது திருமண  விவகாரம் குறித்து நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் கருத்து தெரிவித்திருந்தார். இப்பொழுது தான் அந்த செய்தியை பார்த்தேன். அவர் ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளவர். இன்னும் விவாகரத்து செய்யவில்லை. அப்படியிருக்கும்போது படிப்பு, புகழ் மற்றும் தைரியமுள்ள ஒரு பெண் எப்படி இந்த தவறை செய்திருப்பார் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். மேலும் இந்த திருமணம் முடியும் வரை முதல் மனைவி ஏன் அமைதியாக இருந்தார். திருமணத்தை ஏன் தடுத்து நிறுத்தவில்லை” என கேள்வி எழுப்பியிருந்தார். 

 

இதையும் படிங்க: ட்ரான்ஸ்பிரண்ட் புடவையில் வெளியான பிக்பாஸ் சாக்‌ஷியின் ரகசியம்...பங்கமாய் கலாய்க்கும் ரசிகர்கள்...!

லட்சுமி ராமகிருஷ்ணனின் இந்த பதிவை பார்த்த வனிதா, நான் அவர்களுடைய தனிப்பட்ட விஷயத்தில் தலையிடவில்லை. எனவே இந்த விஷயத்தில் உங்களுடைய தலையீட்டை நிறுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு தெரியாத ஒருவரை பற்றி எவ்வித கருத்தையும் நீங்கள் சொல்ல வேண்டாம் என கடுப்பாக பதிலளித்துள்ளார். இதையடுத்து தனது ட்வீட்டை நீக்கிய லட்சுமி ராமகிருஷ்ணன் வனிதாவிடம் மன்னிப்பு கேட்டார். இந்நிலையில் ஆன்லைன் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வனிதா, லட்சுமி ராமகிருஷ்ணன் சண்டையிட்டுக்கொள்ளும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 

 

இதையும் படிங்க: தளபதி விஜய் தூக்கி வைத்திருக்கும் இந்த குட்டி பாப்பா யார் தெரியுமா?... வைரல் போட்டோ...!

ஆரம்பம் முதலே வனிதா கோபமாகவே பேச்சை ஆரம்பித்தார். நீ யாரு என் வாழ்க்கையில் தலையிட, உன்னை கிழிக்க தான் இந்த ஆன்லைன் இண்டர்வியூவுக்கு வந்தேன். நீ என்ன பெரிய ஐகோர்ட் ஜட்ஜா?. சரி தான் போடி. உனக்கு குடும்பம் இல்லையா. நீ இயக்குநராக இருந்தால் படம் எடுடி என் வாழ்க்கையில் ஏன் தலையிடுகிற . நீ ரொம்ப பத்தினி. ஒருத்தனுக்கு ஒருத்தினு டிராமா போடாத. ஒரு புருஷன் இருப்பதால் நீ பெரிய ஒழுங்கா. என்கிட்ட பதில் சொல்லுடி, தைரியமா சொல்லுடி. நீ யாருன்னு எனக்கு தெரியும் . கிழிச்சி தொங்கவிட்டுடுவேன். உன் புருஷன் ஒரு கேடுகெட்ட வெட்கம் கேட்ட ஜென்மம். நான் உன்ன கேவலப்படுத்திடுவேன். முடிஞ்சா என்மேல ஆக்‌ஷன் எடுடி. நான் அப்படி தான் டி பேசுவேன் என சகட்டுமேனிக்கு தரக்குறைவான வார்த்தைகளை அள்ளி வீசியிருந்தார். 

வனிதாவின் இந்த நாகரிமற்ற பேச்சு அவர்களது ரசிகர்களையும் சேர்த்து சங்கடத்தில் நெளிய வைத்தது. இந்நிலையில் வனிதாவின் தரக்குறைவான பேச்சுக்கு இயக்குநரும், நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன் பதிலளித்துள்ளார். அதில், அவளுக்கு 100 கணவர்கள் கூட இருக்கட்டும், ஆனால் அது வேறொரு பென்ணின் கணவராக இருக்க கூடாது. தனது மனைவி மற்றும் குழந்தைகளை எரிச்சல் அடைய வைப்பதற்காக பீட்டர் பால் கேமரா முன்பு ரொமான்ஸ் செய்வதற்கு முன்பு, முறைப்படி விவாகரத்து செய்ய வேண்டும். எந்த ஒரு ஒழுக்கமான ஆணும், பெண்ணும் இந்த அட்டூழியத்திற்கு எதிராக கருத்து தெரிவிப்பார்கள் என பதிவிட்டுள்ளார். 

இதையும் படிங்க: நிர்வாண போட்டோவை பகிர்ந்த மீரா மிதுன்...மரண பங்கம் செய்யும் நெட்டிசன்கள்...!

சட்டபடி மனைவியாக இல்லாத ஒரு பெண், வேறு ஒருவரின் கணவருடன் ரொமான்ஸ் வீடியோக்களை சோசியல் மீடியாவில் வெளியிடும் போது, அதை அந்த நபரின் ஒரிஜினல் மனைவி பார்த்து அதிர்ச்சியும், மனவேதனையும் அடைவதை அதே பொதுத்தளத்தில் கண்டிக்கும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது என்றும் மற்றொரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார்.