வீரப்பனின் முதல் கொலை! ரஜினிக்கு மட்டும் ஆதரவு ஏன்? விடை தரும் ‘கூச முனிசாமி வீரப்பன்’ ஆவணத் தொடர்!

நக்கீரன் படம்பிடித்த சந்தனக் கடத்தல் வீரப்பனின் வீடியோக்களை கொண்டு உருவாகியுள்ள ‘கூச முனிசாமி வீரப்பன்’ ஆவணத் தொடர் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த ஆவண தொடர் குறித்து சில சுவாரஸ்யமான விஷயங்களை இந்த பதிவில் பார்ப்போம்.
 

Koose Munisamy Veerappan Documentary series Released

சந்தனக் கடத்தல் வீரப்பன்...  என்கிற பெயரை கேட்டாலே, ஒரு காலத்தில் பிரபலங்கள் முதல் ஆட்சியில் இருந்த அரசியல்வாதிகள் வரை பயந்து நடுங்கிய காலம் உண்டு. போலீஸ் காட்டிலும்... மேட்டிலும்... வலை வீசி தேடிய போது, யார் கண்களிலும் சிக்காமல் பலருக்கு ஆட்டம் காட்டியவர் வீரப்பன். இவர் மறைந்து பல வருடங்கள் ஆனாலும், அதிகம் பேசப்படும் ஒரு நபராகவே இருந்து வருகிறார் என்றால் அது மறுக்க முடியாத உண்மை.

வீரப்பன் எனும் வெறிகொண்ட வேட்டை புலியை... தில்லாக சந்தித்து பேட்டி கண்டவர் தான் நக்கீரன் பத்திரிகையின் நிறுவனரும், பத்திரிகையாளருமான நக்கீரன் கோபால். இவர் காட்டுக்குள் சென்று வீரப்பனை சந்தித்து, சுமார் 9 மணி நேரம் வீடியோ பதிவு செய்த... காட்சிகள் தற்போது ஒரு ஆவணப்படமாக மாறியுள்ளது. இதனை நக்கீரன் கோபால் அவர்களின் மகள் பிரபாவதி தயாரித்துள்ளார். மேலும் ஜெயச்சந்திர ஹாஷ்மி, பிரபாவதி, வசந்த் பாலகிருஷ்ணன் இணைந்து இத்தொடரை உருவாக்கியுள்ளனர். ஷரத் ஜோதி இயக்கியுள்ளார். 

Koose Munisamy Veerappan Documentary series Released

சைலண்டாக முடிந்த திருமணம்! காதல் கணவரும் பிகினி உடையில் ஹனிமூன் கொண்டாடும் 'சர்வைவர்' ஐஸ்வர்யா கிருஷ்ணன்!

ஆறு எபிசோடுகள் கொண்ட இத்தொடரின் முதல் சீசன் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதில் வீரப்பனின் இளம் வயது தொட்டு, அவரது முதல் கொலை, யானைத் தந்தம் மற்றும் சந்தன மரக்கடத்தல், அதிகாரிகள் மற்றும் காட்டிக் கொடுத்த பொதுமக்களை கொன்றது, பின் 1996 ல் அவர் சரண்டர் ஆவதற்கான சூழல் கனிந்து வந்தது வரை இத்தொடர் பேசுகிறது. முக்கியமாக, வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் அதிரடிப்படை நடத்திய தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களின் வலிகளையும் இத்தொடர் பதிவு செய்துள்ளது. 

Koose Munisamy Veerappan Documentary series Released

Year Ender 2023 : 2023 ஆம் ஆண்டில்... கோடி கோடியாய் சம்பளம் வாங்கிய டாப் 5 நடிகைகள் யார் யார் தெரியுமா?

நக்கீரன் படம்பிடித்த வீரப்பனின் பிரத்யேக வீடியோக்களுடன், நக்கீரன் கோபால், சீமான், என்.ராம், ரோகிணி, ப.பா.மோகன், வீரப்பனின் மகள் வித்யா ராணி ஆகியோரது நேர்காணல்களும் இதில் இடம்பெற்றுள்ளன. கூடுதல் தகவலுக்காக சில காட்சிகள் புனைவாக மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளன. அதே போல் வீரப்பன் இந்த தொடரில் அரசியல் குறித்த தன்னுடைய கருத்தையும் பதிவு செய்துள்ளார். அதிமுக கட்சியை ஆண்ட ஜெயலலிதாவை விமர்சிக்கும் விதமாக அவரின் பேச்சு அமைந்துள்ளது. 

திமுக தலைவர் கருணாநிதி,  பாமக தலைவர் ராமதாஸ் பற்றியும் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ள வீரப்பன், ரஜினிகாந்துக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார். "உன்னை அமுக்க நிறைய முதலைகள் இருக்கு" என அவரை எச்சரிப்பது போல் பேசியுள்ளார். ரஜினிகாந்த்  ஏற்கனவே அரசியலுக்குள் கால்பதிக்க ஆயத்தமாகி, கடைசி நேரத்தில் பின் வாங்கிய நிலையில்... வீரப்பனின் இந்த கருத்துக்கு ரஜினிகாந்தின் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்கிற ஆர்வம் ஏற்பட்டுள்ளது. 

Koose Munisamy Veerappan Documentary series Released

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்த ஆவணத்தொடரின் இரண்டாவது சீசன் கூடிய விரைவில் வெளியாகும் என்பதையும் படக்குழு தெரிவித்துள்ளனர். சமீபத்தில் நெட்பிலிக்ஸ் ஓடிடி தொடரில், வீரப்பன் குறித்த ஆவணத்தொடர் வெளியாகி சில எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. ஆனால் 'கூச முனிசாமி வீரப்பன்' வீரப்பனின் உண்மையான  அவரின் குணாதிசயம், வாழ்க்கை முறை, அவர் அனைவரிடமும் எப்படி பழகுவார் என்பதை நேரடியாக படம்பிடித்த காட்சிகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆவண தொடர் மூலம் இதுவரை வீரப்பன் பற்றி யாருக்கும் தெரியாத, பேசப்படாத பல விஷயங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios