MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Year Ender 2023 : 2023 ஆம் ஆண்டில்... கோடி கோடியாய் சம்பளம் வாங்கிய டாப் 5 நடிகைகள் யார் யார் தெரியுமா?

Year Ender 2023 : 2023 ஆம் ஆண்டில்... கோடி கோடியாய் சம்பளம் வாங்கிய டாப் 5 நடிகைகள் யார் யார் தெரியுமா?

2023 ஆம் ஆண்டில் வெளியான, படங்களில்... சம்பள விஷயத்தில் டாப் 5 இடத்தை தக்க வைத்து கொண்ட 5 முன்னணி நடிகைகள் பற்றி, இந்த தொகுப்பில் பார்ப்போம். 

2 Min read
Author : manimegalai a
Published : Dec 13 2023, 03:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15


அதிக சம்பளம் வாங்கும் நாயகிகள் லிஸ்டில்... கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாகவே முதல் இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ள தென்னிந்திய நடிகையான நயன்தாரா தான் இந்த முறையும் முதல் இடத்தை பிடித்துள்ளார். தமிழில் ஒரு படத்தில் நடிக்க, 3 கோடி முதல் 5 கோடி வரை சம்பளமாக வாங்கும் இவர், இந்த முறை பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகி உள்ளதால் இவரது சம்பள கிராப் அதிரடியாக எகிறி உள்ளது. இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக இவர் நடித்த 'ஜவான்' படத்திற்காக அதிகபச்சமாக 10 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார். அதே போல் இறைவன், அன்னபூரணி ஆகிய படங்களுக்கு 11 கோடி சம்பளமாக வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

25

தமன்னா:

நயன்தாராவை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் உள்ளார் நடிகை தமன்னா. திரைப்படங்களில் ஒரு பக்கம் இவர் பிசியாக இருந்தாலும், மற்றொரு புறம் லவ் மூடில், காதலருடன் வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழை விட பாலிவுட் படங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் தமன்னா... திரைப்படங்களில் நடிக்க 5 கோடி முதல் 7 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெருகிறாராம். குறிப்பாக 'ஜெயிலர்' படத்தில் காவாலா பாடல் மற்றும் சில சீன்களில் வந்து போகவே, 7 கோடி ரூபாய் பெற்றதாக கூறப்படுகிறது.

Vishnu Vishal: மிக்ஜாம் புயல் கொடுத்த வலி..! முதல்வர் நிவாரண நிதிக்கு பணத்தை அள்ளிக்கொடுத்த விஷ்ணு விஷால்..!

35

சமந்தா:

மூன்றாவது இடத்தில்... நடிகை சமந்தா உள்ளார். திருமணம் ஆகி விவாகரத்தான பிறகும் தனக்கான மார்க்கெட்டை தக்க வைத்து கொண்டுள்ள சமந்தா, மயோசிட்டிஸ் பிரச்சனை காரணமாக இந்த ஆண்டு அதிகப்படியான படங்கள் நடிப்பதை தவிர்த்து வந்தாலும்... இந்த ஆண்டு இவர் நடிப்பில், யாசோதா, சாகுந்தலம், குஷி போன்ற திரைப்படங்கள் வெளியாகின. இதில், மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான சாகுந்தலம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. ஆனால் யசோதா மற்றும் குஷி ஆகிய படங்கள் முதலுக்கு மோசம் இல்லாமல் வசூல் செய்தது. மேலும் 2023 ஆம் ஆண்டு சமந்தா... தான் நடிக்கும் படங்களுக்கு நான்கு கோடி முதல் 6 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

45
Trisha

Trisha

த்ரிஷா:

பல வருடங்களுக்கு பின்பு... மீண்டும் பொன்னியின் செல்வன் படத்தின் முலம் லைம் லைட்டுக்கு வந்துள்ள நடிகை த்ரிஷா தான் 4-ஆவது இடத்தை பிடித்துள்ளார். இவர் நடிப்பில் இந்த ஆண்டு பொன்னியின் செல்வன் 2, லியோ மற்றும் தி ரோடு ஆகிய படங்கள் வெளியானது. இதில் பொன்னியின் செல்வன் 2 மற்றும் லியோ ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் மாஸ் காட்டியது. அதே போல் த்ரிஷா கதையின் நாயகியாக நடித்த தி ரோடு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தான் நடிக்கும் படங்களுக்கு 3 கோடி முதல் 5 கோடி வரை சம்பளமாக பெற்றுள்ளார் என தெரிகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

55

கீர்த்தி சுரேஷ்:

அதிக சம்பளம் வாங்கும் நாயகிகள் லிஸ்டில் 5-ஆவது இடத்தில் உள்ளது பிரபல இளம் நடிகை கீர்த்தி சுரேஷ் தான். தொடர்ந்து தரமான கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வருவது மட்டும் இன்றி, பாலிவுட் திரையுலகிலும் அறிமுகமாகியுள்ள இவர், தான் நடிக்கும் படங்களுக்கு 3 முதல் 4 கோடி வரை சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது. மற்ற நடிகைகள் அனைவருமே இவர்களை விட குறைவான தொகையை தான் சம்பளமாக பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் முடிவில் கமல்! ஆண்டவர் இடத்தை நிரப்ப 5 பிரபலங்களை குறி வைத்த விஜய் டிவி
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
கீர்த்தி சுரேஷ்
நயன்தாரா
திரிஷா

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved