உலக நாடுகளை கடந்து தற்போது இந்திய மக்களையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பீதியின் காரணமாகவும், மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்கிற நோக்கத்திலும், மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில் தற்போது ஊரடங்கு உத்தரவு மேலும் சில தினங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இதனால் எப்போது ஷூட்டிங், டப்பிங், பட விழாக்கள் என பிஸியாக இருந்த பிரபலங்கள் அனைவரும் வீட்டின் உள்ளேயே முடங்கியுள்ளனர். தற்போது கிடைத்திருக்கும் இந்த ஓய்வு நாட்களை குடும்பத்துடன் செலவிட்டு வரும் அவர்கள், அடிக்கடி தங்களுக்கு பிடித்த சமையல் செய்து அசத்தி வரும் தகவல்கள் அடிக்கடி வந்த வண்ணம் உள்ளது.

குறிப்பாக என்ன செய்தாலும் பிரபலங்கள் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வீடியோவாகவோ.. அல்லது புகைப்படமாகவோ வெளியிட மறப்பது இல்லை. 

அந்த வகையில், நடிகர் ஜெயம் ரவிவுடன், கோமாளி படத்தில் நடித்த நடிகை சம்யுக்தா ஹெக்டே, தற்போது தனது சமூக வலைத்தளத்தில் டான்ஸ் ஆடி வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்கள் மத்தியிலும், நெட்டிசன்கள் மத்தியிலும் லைக்குகளை அள்ளி வருகிறது .

உலகப் புகழ்பெற்ற பாடகர் மற்றும் நடன கலைஞருமான ஜஸ்டின் பீபர் பாடலுக்கு, குட்டை டவுசரில், கவர்ச்சியை உடையில் சும்மா செம்மையாக இவர் ஆடியுள்ள டான்ஸ், சமூக வலைத்தளத்திரியே தெறிக்க விட்டு வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து சம்யுக்தா நடித்த பப்பி திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பட்டையை கிளப்பும் அந்த வீடியோ இதோ: