Asianet News TamilAsianet News Tamil

நிகழ்ச்சி மேடையில் மாமியாரின் ரகசியத்தை போட்டுடைத்த கீர்த்தி சாந்தனு...

நிகழ்ச்சியில் தனது மாமியார் பூர்ணிமா மற்றும் தனது தாயுடன் பங்கேற்ற கீர்த்தி சாந்தனு. மாமியார் குறித்த சுவாரசிய தகவல்களை பதிவிட்ட ப்ரோமோ ஒன்று வைரல் ஆகி வருகிறது.

keerthi shanthanu speak about mother in law poornima bhagyaraj
Author
First Published Sep 3, 2022, 6:51 PM IST

தமிழ் திரையுலைகள் முன்னணி இயக்குனர் மற்றும் நடிகராக இருந்தவர் பாக்கியராஜ். இவரின் மனைவியான பூர்ணிமாவும் பிரபல நடிகை ஆவார். இவர்களது மகன் சாந்தனு தற்போது முன்னணி நாயகன்   இடத்தை பிடிக்கும் ரேசில் போட்டியிட்டு வருகிறார். முன்னதாக பாக்யராஜின் வேட்டிய மடிச்சு கட்டு படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு சர்க்கரை கட்டி படம் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார். முதல் படத்திலேயே சிறந்த நடிகருக்கான அறிமுகம் நடிகருக்கான விருதை பெற்றவர். மலையாள படம் சிலவற்றிலும் நடித்துள்ளார். 

அம்மாவின் கைபேசி, கதை திரைக்கதை வசனம் இயக்கம், வாய்மை, வானம் கொட்டட்டும், பாவக்கதைகள், குரு, கசடதபர, முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் சாந்தனு. அவர் இறுதியாக நடித்த முருங்கைக்காய் சிப்ஸ் படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்த படத்தை ஸ்ரீஜர் இயக்கியிருந்தார். இதில் அதுல்ய ரவி நாயகியாக நடித்திருந்தார். இதன் பாடல்கள் முன்னதாக வெளியாகி வரவேற்பு பெற்று இருந்த நிலைகள் படம் கடந்த டிசம்பர் 10ஆம் தேதி திரைக்கு வந்தது. தற்போது சாந்தனு ராவண கூட்டம் என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் செய்திகளுக்கு...சேலையை ஒதுக்கி..இடுப்பழகை காட்டி திக்குமுக்காட வைக்கும் பிக் பாஸ் சாக்ஷி அகர்வால்

மேலும் செய்திகளுக்கு...எங்கள் கூட்டணியில் கட்டாயம் மேஜிக் இருக்கும்...இசை விழாவில் உறுதியளித்த சிம்பு

இவரது மனைவி கீர்த்தி கலைஞர் டிவிகள் ஒளிபரப்பான மானாட மயிலாட ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமானார் தொகுப்பாளனி ஆவார். இவரை கடந்த 2015 ஆம் ஆண்டு காதல் கரம் பிடித்தார் சாத்தனு.  இவர்களது ரொமான்டிக் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைதளத்தில் ட்ரெண்டாவது  வழக்கம் சமீபத்தில் கூட இவர்கள் கடற்கரையில் இருந்தபடி பாடலுக்கு பர்ஃபார்ம் செய்திருந்த வீடியோ சமூக வலைதளத்தை பரவி இருந்தது.

தற்போது கீர்த்தி  பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளனியாக பணியாற்றி வருகிறார். அந்த அந்த நிகழ்ச்சியில் தனது மாமியார் பூர்ணிமா மற்றும் தனது தாயுடன் பங்கேற்ற கீர்த்தி சாந்தனு. மாமியார் குறித்த சுவாரசிய தகவல்களை பதிவிட்ட ப்ரோமோ ஒன்று வைரல் ஆகி வருகிறது. அதில் தனக்கும் தனது மாமியாருக்கும் சமைக்கவே தெரியாது. பாக்கியராஜ் உடனிருந்து பரிமாறும் பழக்கம் கொண்டவர் தனது மாமியார். எப்போதுமே தன்னை திட்ட மாட்டார் என பல சுவாரஸ்ய தகவல்களை வெளியிட்டுள்ளார். 

மேலும் செய்திகளுக்கு...சரிவை சந்திக்கும் கோப்ரா...சீயானின் 3 வது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

பூர்ணிமா பாக்கியராஜ் மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் பிரபலமான நடிகையாக இருந்தார் 80களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர், விதி படத்தில் ராதாவாக வந்து ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்திருந்தார். பின்னர் உங்கள் வீட்டுப் பிள்ளை, நீங்கள் கேட்டவை உள்ளிட்ட பிரபல வெற்றி படங்களில் தோன்றிய பூர்ணிமா, 1984 ஆம் ஆண்டு பாக்யராஜை கரம் பிடித்தார். இந்த தம்பதிக்கு சரண்யா, சாந்தனு என இரு பிள்ளைகள் உள்ளனர்.

 

 

திருமணத்திற்கு பிறகு படங்களில் பெரிதாக தோன்றாத இவர் ஆதலால் காதல் செய்வேன் என்னும் படம் மூலம் மீண்டும்  குணசித்திர வேடத்தில் தோன்றியிருந்தார். தற்போது ராகவா லாரன்ஸின் ருத்ரன் படத்தில் நடித்த முடித்துள்ளார் பூர்ணிமா பாக்கியராஜ். மேலும் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் எங்கள் வீட்டு மீனாட்சி சீரியலில் நடித்து வருகிறார். முன்னதாக  சன் டிவியில் ஒளிபரப்பான பூவே உனக்காகவே தொடரில் காமியோவாக தோன்றியிருந்தார் பூர்ணிமா பாக்கியராஜ்.

Follow Us:
Download App:
  • android
  • ios