Asianet News TamilAsianet News Tamil

சேலையை ஒதுக்கி..இடுப்பழகை காட்டி திக்குமுக்காட வைக்கும் பிக் பாஸ் சாக்ஷி அகர்வால்

தற்போது சேலையில் தன் இடுப்பழகை காட்டியபடி சாக்ஷி கொடுத்துள்ள போஸ்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Sakshi Agarwal latest saree glamour photos
Author
First Published Sep 3, 2022, 5:57 PM IST

பிக் பாஸ் மூலம் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சாக்ஷி அகர்வால். மாடலான இவர் இந்த நிகழ்ச்சிக்கு முன்னரே பல படங்களில் தோன்றியிருந்தாலும் இவருக்கு சரியான அறிமுகத்தை கொடுத்தது பிக் பாஸ் தமிழ் சீசன் 3 தான். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாக்ஷி, கவின் மீது ஒரு கண் வைத்திருந்தார் பின் கவின் லாஸ்லியா மீது தன் கவனத்தை திருப்பியதால் கடுப்பான சாக்ஷி அகர்வால் அவ்வப்போது இருவரோடும் போடும் சண்டைகள் மிகப் பிரபலமாகவே இருந்தது. பல சர்ச்சைகளில் சிக்கி வந்த இவர் பாதியிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். 

மேலும் செய்திகளுக்கு...எங்கள் கூட்டணியில் கட்டாயம் மேஜிக் இருக்கும்...இசை விழாவில் உறுதியளித்த சிம்பு

முன்னதாக சாக்ஷி அகர்வால் ராஜா ராணி படத்தின் மூலம் திரையுலகில் என்ட்ரி கொடுத்திருந்தார். அதில்  துணை வேடத்தில் நடித்திருந்த இவர் பின்னர் கன்னடம், மலையாளம் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வந்தார். பின்னர் லாஸ்ட்லியாவிற்கு காலா படத்தில் ரஜினியின் மருமகளாகவும், விசுவாசத்தில் நிரஞ்சனா  உடன் வேலை பார்ப்பவராகவும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

மேலும் செய்திகளுக்கு...சரிவை சந்திக்கும் கோப்ரா...சீயானின் 3 வது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

இதைத்தொடர்ந்து குட்டிக்கதை, டெடி, சிண்ட்ரெல்லா, அரண்மனை, நான்கு கதைகள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் சிண்ட்ரெல்லா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த இவருக்கு பாராட்டுக்கள் குவிந்தன. தற்போது பகிரா, நான் கடவுள் இல்லை, அந்த இரவு, 120 மணி நேரம், குறுக்கு வழி, ஆயிரம் ஜென்மங்கள் உள்ளிட்ட பல படங்களை தன் கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையே வெப் சீரிஸிலும் களமிறங்கிய  சாக்ஷி  புதிய வெப் சீரிஸில் நடித்து வருகிறார்.

அதோடு சந்தோஷ் நாராயணனின் இசை ஆல்பத்திலும் தோன்றியுள்ளார். இதற்கிடையே அவ்வப்போது ரசிகர்களை கவரும் விதத்தில் கிளாமர் ஃபோட்டோஸ் நடத்தி அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்.  குட்டையுடை, சேலை என எந்த உடையாக இருந்தாலும் இவர் வெளியிடும் புகைப்படங்களில் கவர்ச்சி புயலாகவே வீசி வருகிறது. அந்த வகையில் தற்போது சேலையில்  தன் இடுப்பழகை காட்டியபடி இவர் கொடுத்துள்ள போஸ்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

மேலும் செய்திகளுக்கு...திருமணத்தால் சிக்கலை சந்திக்கும் நயன்தாரா...அட..இப்படி ஒரு கண்டிஷனா?

Follow Us:
Download App:
  • android
  • ios