சரிவை சந்திக்கும் கோப்ரா...சீயானின் 3 வது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
இந்த வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான கோப்ரா மூன்று நாட்களில் மொத்தம் 21 கோடிகளை மட்டுமே வசூலாக பெற்றிருப்பது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வரும் விக்ரமின் கோப்ரா படம் பல ஆண்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்ததாகும். அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இந்தப் படம் கடந்த 2019 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் படப்பிடிப்பில் இருந்ததாலும் முன்னதாக வெளியான விக்ரமின் பர்ஸ்ட் லுக் உள்ளிட்டவையும் படம் குறித்த ஏகபோக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருந்தது.
இந்த படத்தில் ஏழு வேடங்களில் நடித்துள்ளார் விக்ரம். கணித மேதையான நாயகன்ஒவ்வொரு நாடாக சென்று அங்கு உள்ளவர்களை கொலை செய்யும் கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது கோப்ரா. இந்த படத்தில் கே ஜி எஃப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான் , மிருணாளினி ரவி, மீனாட்சி கோவிந்தராஜன், ரோபோ ஷங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். இதன் மூலம் ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான் உள்ளிட்டோர் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமாகி உள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு...திருமணத்தால் சிக்கலை சந்திக்கும் நயன்தாரா...அட..இப்படி ஒரு கண்டிஷனா?
முன்னதாக ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்த சமயத்தில் உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டிருந்த விக்ரமை இந்த நிகழ்ச்சியில் கண்ட ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் ஆழ்ந்திருந்தனர். அதோடு படத்தை பிரமோஷன் செய்வதற்காக விக்ரம்,ஸ்ரீநிதி ஷெட்டி, , மிருணாளினி உள்ளிட்டோர் உள்நாட்டு பயணங்களை மேற்கொண்டு ரசிகர்களை சந்தித்து படம் குறித்தான ஆர்வத்தை அதிகரித்திருந்தனர்.
மேலும் செய்திகளுக்கு...என்னது ..ராஷ்மிகாவுக்கு ராசி இல்லையா?..பாலிவுட்டில் மோசமான பெயரை சம்பாதித்த வாரிசு பட நாயகி
ஆனால் படம் வெளியாகி ஒரே நாளில் அத்தனை எதிர்பார்ப்புகளையும் தொம்சம் செய்து விட்டதாம். படத்தில் போதுமான சுவாரஸ்யம் இல்லை, படம் மிகவும் நீளமாக உள்ளது என்று விமர்சனங்களும் எழுந்தது. இதனால் படத்திலிருந்து 20 நிமிட காட்சிகளை துண்டிப்பதாக தயாரிப்பு நிறுவனம் முன்னதாக அறிவித்திருந்தது.
அதோடு கோப்ரா படம் போதுமான வசூலையும் பெறவில்லை. விக்ரமின் திருவிழா வெளியிடாக கடந்த விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்த படம் திரையிடப்பட்டது. ஆனால் படம் வார நாட்களுக்குள் வெளியானதால் போதுமான வசூலை பெறவில்லையாம். விக்ரம் ரசிகர்களின் நீண்ட கால காத்திருப்பிற்கு பிறகு இந்த படம் வெளியானதால் முன்பதிவின் மூலம் முதல் நாளில் ரூபாய் 20 கோடிகளை ஓப்பனிங் ஆக பெற்று இருந்தது கோப்ரா. ஆனால் எதிர்மறை விமர்சனங்களும், வார நாட்கள் என்பதாலும் இரண்டாம் நாளில் வெறும் 6.50 கோடிகளை மட்டுமே வசூல் செய்திருந்தது.
மேலும் செய்திகளுக்கு...கார்த்தியின் அடுத்த திட்டம் ..வெளிநாட்டு பெயரில் இறங்க முடிவாம்..
இந்நிலைகள் மூன்றாவது நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கோப்ரா படம் மூன்றாவது நாள் முடிவில் வெறும் 3.70 கோடிகளை மட்டுமே வசூல் செய்துள்ளதாம். இந்த வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான கோப்ரா மூன்று நாட்களில் மொத்தம் 21 கோடிகளை மட்டுமே வசூலாக பெற்றிருப்பது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.