திருமணத்தால் சிக்கலை சந்திக்கும் நயன்தாரா...அட..இப்படி ஒரு கண்டிஷனா?
படங்களிலிருந்து மெல்ல மெல்ல ஒதுங்கி தயாரிப்பில் கவனம் செலுத்த நயன்தாரா முடிவு செய்துள்ளதாக ஒரு பேச்சு அடிபடுகிறது.
திரைப்படமான மனசினக்கரே என்னும் படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா தற்போது லேடிஸ் சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். தெலுங்கு, தமிழ், கன்னடம் என அனைத்து மொழிகளின் இவருடைய ராஜ்ஜியம் தான். கடந்த 2004 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் ஆனார். இதில் சரத்குமாருக்கு நாயகியாக நடித்த இவர் இரண்டாம் படத்திலேயே சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக விட்டார். இதனால் இரு படங்களிலேயே முன்னணி நாயகியின் அந்தஸ்தை பெற்றுவிட்டார் நயன்தாரா. பின்னர் தமிழக ரசிகர்களின் மனதில் அசைக்க முடியாத இடத்தை பெற்று விட்டார் லேடி சூப்பர் ஸ்டார்.
முன்னதாக கடந்த 2011 ஆம் ஆண்டு நடிகர் பிரபுதேவாவை திருமணம் செய்யும் எண்ணத்தில் இருந்த இவர் தெலுங்கில் ராம ராஜ்ஜியம்படத்தோடு சினிமா உலகிற்கு முழுக்கு போடா முடிவெடுத்தாக தகவல் பரவியது. ஆனால் இவர்களது காதல் முறிவு மீண்டும் இவரை சினிமாவில் நடிக்க ஊக்கிவித்தது என்றே சொல்லலாம். இதை தொடர்ந்து ராஜா ராணி, நானும் ரவுடிதான், அறம், இருமுகன் என நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார்.
மேலும் செய்திகளுக்கு...என்னது ..ராஷ்மிகாவுக்கு ராசி இல்லையா?..பாலிவுட்டில் மோசமான பெயரை சம்பாதித்த வாரிசு பட நாயகி
இவர் நடிக்கும் படங்களில் தனக்கே முன்னணி கதாபாத்திரம் இருக்கும் வண்ணம் கதைகளை தேர்ந்தெடுக்க ஆரம்பித்தார். காதல் தோல்வியால் துவண்டு கிடந்த இவருக்கு நானும் ரவுடிதான் படம் புகழோடு சேர்த்து காதல் வாழ்க்கையும் பெற்றுக் கொடுத்தது. இதன் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாராவுக்கு காதல் மலர்ந்தது. ஏழு வருடங்கள் இருவரும் காதல் பந்தத்தில் இணைந்திருந்தனர்.
மேலும் செய்திகளுக்கு...கார்த்தியின் அடுத்த திட்டம் ..வெளிநாட்டு பெயரில் இறங்க முடிவாம்..
பின்னர் கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். மகாபலிபுரத்தில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்த மணவறையில் இவர்களது திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் முதல் நம்ம ஊர் சூப்பர் ஸ்டார் வரை அனைவரும் வருகை தந்திருந்தனர். முக்கிய பிரபலங்கள் மட்டும் பங்கேற்ற இவர்களது திருமண புகைப்படங்களை விக்னேஷ் சிவன் ஒரு மாதம் கழித்து தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்தார்.
அற்றகோடு ஹனிமூனுக்காக இவர்கள் தாய்லாந்துக்கும், சமீபத்தில் இரண்டாவது ஹனிமூனுக்காக ஸ்பெய்னுக்கு சென்றுள்ளனர். அங்கு இவர்கள் எடுத்துக்கொள்ளும் ரொமான்டிக் புகைப்படங்கள் அனைத்தையும் பகிர்ந்து வருகிறார் விக்கி. இந்நிலைகள் படங்களிலிருந்து மெல்ல மெல்ல ஒதுங்கி தயாரிப்பில் கவனம் செலுத்த நயன்தாரா முடிவு செய்துள்ளதாக ஒரு பேச்சு அடிபடுகிறது. நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்னும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். தயாரிப்பு நிறுவனம் மூலம் பல படங்களை எடுத்து வெற்றியும் கண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு....டூ பீஸில் பார்த்தவுடன் பக்கென்றாக்கும் பாலிவுட் பிரபலம்...கிக் போட்டோஸ் இதோ !
இந்த நிலையில் குடும்பத்தினர் நயன்தாராவை தாலியை கழட்டக்கூடாது என கண்டிஷன் போட்டுள்ளனர். இதனால் படங்களில் பல கதாபாத்திரங்களில் நடிக்கும் பொழுது தாலியுடன் நடிக்க இயலாது என்பதால் படங்களில் இருந்து ஒதுங்குவதற்கான முடிவை நயன்தாரா எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக திருமணமானதிலிருந்து இதுவரை எடுத்துக் கொண்ட அனைத்து புகைப்படங்களிலும் நயன்தாரா தாலியுடன் இருப்பதை காண முடிந்தது. இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.