Asianet News TamilAsianet News Tamil

எங்கள் கூட்டணியில் கட்டாயம் மேஜிக் இருக்கும்...இசை விழாவில் உறுதியளித்த சிம்பு

கௌதம் சார் உடன் நான் மூன்றாவது முறையாக இணைகிறேன் எங்கள் கூட்டணியில் கட்டாயம் மேஜிக் இருக்கும் என கூறியுள்ளார் சிம்பு.

simbu speech in VendhuThanindhathu Kaadu  trailer and audio launch event
Author
First Published Sep 3, 2022, 5:14 PM IST

சிம்பு தற்போது வெந்து தணிந்தது காடு மூலம்  கௌதம் வாசுதேவ் மேனன் உடன் மீண்டும் இணைந்துள்ளார்.  பி. ஜெயமோகன் எழுதிய நாவலின் அடிப்படையில் இந்த படம் உருவாகியுள்ளது.  ஐசரி கே. கணேஷ் தயாரிக்கும் இந்த படம் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகியுள்ளதாம். இதில் ராதிகா சரத்குமார் , சித்திக் , நீரஜ் மாதவ் மற்றும் ஏஞ்சலினா ஆபிரகாம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க சித்தி இத்னானி நாயகியாக நடித்துள்ளார்., இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார் . படம் செப்டம்பர் 15, 2022 அன்று திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு...சரிவை சந்திக்கும் கோப்ரா...சீயானின் 3 வது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

முன்னதாக இந்த படத்திற்காக வெகுவான உடல் எடையை குறைத்து இருந்தார் சிம்பு. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பிரத்தியேகமாக போடப்பட்ட மேடையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு கமலஹாசன் மற்றும் உதயநிதி இருவரும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இந்த நிகழ்விற்கு ஹெலிகாப்டர் மூலம் நாயகன் சிம்பு மாஸாக என்ட்ரி கொடுத்தார். இதையடுத்து படத்தின் டிரைலரும் வெளியானது. கதை சொல்லும் பாணியில் அமைந்த இந்த படத்தின் டிரைலர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

மேலும் செய்திகளுக்கு...திருமணத்தால் சிக்கலை சந்திக்கும் நயன்தாரா...அட..இப்படி ஒரு கண்டிஷனா?

 

சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன் கேங்ஸ்டர்களிடம் மாட்டிக்கொள்ளும் கதைக்களத்தை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகி உள்ளது என்பது  ட்ரெய்லர் மூலம் தெரிய வந்தது. இந்த ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருகிறது. முன்னதாக இந்த படத்தில் இருந்து வெளியான இரு பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் தற்போது இசை வெளியீட்டு மேடையில் சிம்பு பேசியதும் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகளுக்கு...என்னது ..ராஷ்மிகாவுக்கு ராசி இல்லையா?..பாலிவுட்டில் மோசமான பெயரை சம்பாதித்த வாரிசு பட நாயகி

 

நேற்று விழா மேடையில் பேசிய சிம்பு,  எனக்கு இந்த மாதிரி பிரம்மாண்ட விழா எதுவும் சமீபத்தில் நடக்கவில்லை.  இது என்னுடைய விழாதானா என சந்தேகமே வந்துவிட்டது. கமல் இந்த விழாவிற்கு வருகை தந்துள்ளார். அவர் எனது விண்ணைத்தாண்டி வருவாயா விழாவிற்கும் வந்திருந்தார். எனவே அந்த படம் போல இந்தப் படமும் வெற்றி பெறும்.  தயாரிப்பாளர் என்னை மகனைப் போல பார்த்துக் கொண்டார். எனது தந்தை அமெரிக்காவில் சிகிச்சை எடுக்க அவர்தான் முழு காரணம். கௌதம் சார் உடன் நான் மூன்றாவது முறையாக இணைகிறேன் எங்கள் கூட்டணியில் கட்டாயம் மேஜிக் இருக்கும் என கூறியுள்ளார்.

 

 

அதோடு ஏ ஆர் ரகுமான் சார் எனக்கு எப்போதும் நல்ல பாடல்களை தான் கொடுப்பார் அவருக்கு நன்றி. சித்தி இத்னானி இந்த படத்தின் மூலம் அறிமுகமாகி நல்ல நடிப்பை கொடுத்திருக்கிறார். ஒரு காதல் கதையை உருவாக்க முடிவு செய்திருந்தோம். பின்னர் தான் ஜெயமோகனின் கதை கிடைத்தது. 19 வயது இளைஞனாக நான் இதில் நடித்துள்ளேன் என கூறியுள்ளார் சிம்பு.

Follow Us:
Download App:
  • android
  • ios