"சண்ட செய்யெல்லாம் நேரமில்ல".. சாரே கொலமாசு.. வெளியான லியோ பட போஸ்டர் - டீகோட் செய்ய துவங்கிய ரசிகர்கள்!
தளபதி விஜய் மற்றும் இந்திய சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்க, லோகேஷ் கனகராஜ் இயக்கி விரைவில் வெளியாகவிருக்கும் திரைப்படம் தான் லியோ. இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று இது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டட் இயக்குனராக மாறி உள்ள லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் லியோ. ஏற்கனவே தளபதி விஜய் அவர்களை வைத்து மாஸ்டர் என்ற வெற்றித் திரைப்படத்தை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள், தனது லோகி சினிமாடிக் யுனிவர்ஸ்குள் இந்த லியோ திரைப்படத்தை கொண்டு வருவாரா? மாட்டாரா? என்கின்ற எதிர்பார்ப்பு, விஜயின் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பாக மாறி உள்ளது.
லியோ திரைப்பட பணிகளை முடிக்க உள்ள லோகேஷ் கனகராஜ் அடுத்தபடியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ள அவருடைய 171வது திரைப்படத்தை இயக்கு உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விக்ரம், ரோலக்ஸ், லியோ மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகிய நால்வரையும் ஒன்றிணைத்து ஒரு திரைப்படத்தை எடுக்க லோகேஷ் யோசனைகளை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
எது எப்படி இருந்தாலும், விரைவில் வெளியாக உள்ள தளபதி விஜயின் லியோ திரைப்படம் மாபெரும் வெற்றி பெறும் என்கின்ற நம்பிக்கை அவருடைய ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. பல ஆண்டுகள் கழித்து தளபதி விஜய் அவர்களுடன் நடிகை திரிஷா இணைந்துள்ள இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் தெலுகு போஸ்டர் ஒன்று தற்பொழுது வெளியாகி உள்ளது.
"Keep Calm and Avoid Battle" என்ற தலைப்புடன், வெளியாகியுள்ள இந்த போஸ்டர், தெலுங்கு ரசிகர்களுக்காக வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரை தளபதி விஜய் அவர்களே தனது ட்விட்டர் (X) தளத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது லியோ பட பணிகளை முடித்துள்ள விஜய், தனது அடுத்த பட வேலைகளை விரைவில் துவங்கவுள்ளார்.