ரெட்ரோவுக்கு பின் கார்த்திக் சுப்புராஜின் புதிய படம் ரெடி: ஹீரோ இவரா?

Karthik Subbaraj Next Project with Nivin Pauly : சூர்யாவின் ரெட்ரோ படம் திரைக்கு வந்த பிறகு கார்த்திக் சுப்புராஜ் புதிய படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Karthik Subbaraj Next Project with Nivin Pauly and Harish Kalyan after Suriya's Retro Movie rsk

Karthik Subbaraj Next Project with Nivin Pauly : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். ரஜினியை வைத்து பேட்ட படத்தை இயக்கினார். இவரது படைப்புகள் எல்லாமே வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாக்கப்படும். அப்படி உருவான படங்கள் தான் பீட்சா, ஜிகர்தண்டா, பெஞ்ச் டாக்கீஸ், மெர்குறி, மஹான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இப்போது நடிகர் சூர்யாவை வைத்து ரெட்ரோ படத்தை இயக்கி வருகிறார்.

ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ் மற்றும் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ரொமாண்டிக் ஆக்‌ஷன் த்ரில்லர் கதையை மையப்படுத்திய ரெட்ரோ படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பழனிவேல் நிச்சயதார்த்தம் நடக்குமா, நடக்காதா? டுவிஸ்ட் மேல டுவிஸ்ட்!

இவர்களுடன் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன், பிரேம் குமார், துரைராஜ், நந்திதா தாஸ் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இது சூர்யாவின் 44ஆவது படம். இந்தப் படத்தின் வெற்றியை மட்டுமே சூர்யா பெரிதும் நம்பியிருக்கிறார். இதற்கு முன்னதாக வந்த கங்குவா படம் தோல்வியை கொடுக்கவே சூர்யா ரெட்ரோ படத்தை நம்பியிருக்கிறார். முழுக்க முழுக்க லவ், காமெடி மற்றும் சண்டைக் காட்சிகளுடன் இந்தப் படம் படமாக்கப்பட்டுள்ளது.

ரெட்ரோ படத்தின் 80 சதவிகித காட்சிகள் செட் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது. பூஜா ஹெக்டேவும் தன்னுடைய காட்சிகளை முழுவதுமாக நடித்துக் கொடுத்துவிட்டார். இந்தப் படத்தின் படப்பிடிப்பும் முடிக்கப்பட்டு தற்போது போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. அதோடு இந்த ஆண்டின் கோடை விடுமுறையை முன்னிட்டு படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மதகஜராஜா 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ்: சோஷியல் மீடியாவுல கலாய்ப்பாங்களே என்று பயந்தேன்: சுந்தர் சி!

தமிழ் மட்டுமின்றி ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழியிலும் இந்த படம் வெளியாக இருக்கிறது. அதோடு இந்தப் படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும், ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.80 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் இந்தப் படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்க இருக்கும் புதிய படம் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி மலையாள நடிகர் நிவின் பாலி மற்றும் ஹரிஷ் கல்யாணை வைத்து புதிய படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. எனினும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று தெரிகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios