மதகஜராஜா 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ்: சோஷியல் மீடியாவுல கலாய்ப்பாங்களே என்று பயந்தேன்: சுந்தர் சி!
Sundar C afraid about Madhagajaraja Movie : மதகஜராஜா படம் 12 ஆண்டுகளுக்கு பிறகு திரைக்கு வரும் நிலையில் ரிலீஸ் தேதி அறிவித்த போது நான் பயந்தேன் என்று இயக்குநர் சுந்தர் சி கூறியுள்ளார்.
Madhagajaraja Release Date, Madhagajaraja Pongal Release
Sundar C afraid about Madhagajaraja Movie : கடந்த 2012 ஆம் ஆண்டுக்கு எடுக்கப்பட்ட படம் மத கஜ ராஜா. இந்த படம் 2013 ஆம் ஆண்டு திரைக்கு வர இருந்தது. ஆனால், எதோ பிரச்சனை காரணமாக இத்தனை ஆண்டுகளாக மதகஜராஜா படம் பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. இயக்குநர் சுந்தர் சி இயக்கிய படம். இந்தப் படத்தில் விஷால், வரலட்சுமி சரத்குமார், சந்தானம், அஞ்சலி ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் வரும் 12 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது.
Madhagajaraja Pre Release Event
இந்த நிலையில் தான் 12 ஆண்டுகளுக்கு பிறகு மத கஜ ராஜா படம் திரைக்கு வரும் நிலையில் இந்தப் படத்தின் பிரஸ் மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில், சுந்தர் சி, விஷால், விஜய் ஆண்டனி, குஷ்பு ஆகியோர் உள்பட பலரும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய சுந்தர் சி கூறியிருப்பதாவது: இந்தப் படம் திரைக்கு வரும் தேதி குறித்து நான் பயந்தேன். ஏனென்றால், 12 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாக இருந்த மத கஜ ராஜா இப்போது திரைக்கு வர இருக்கிறது. ஏனென்றால், அப்போது இருந்த ரசிகர்கள் வேறு, அவர்களது மனநிலை வேறு, இப்போது இருக்கும் ரசிகர்கள், அவர்களுடைய மனநிலை வேறு.
Madhagajaraja Press Meet
ஏனென்றால் சோஷியல் மீடியாவில் கலாய்ப்பாங்கள் என்று நான் பயந்தேன். ஆனால், இப்போது படத்தை பார்த்த பிறகு இப்படி ஒரு வரவேற்பு வரும் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. இந்த வரவேற்பை பார்த்த பிறகு படக்குழுவினர் ரொம்பவே ஹேப்பி ஆகியிட்டோம். எனினும், படம் சிறந்த பொழுது போக்கு படமாக இருக்கும். படத்தை பற்றி அறிவிப்பு வந்ததுக்கு பிறகு சமூக வலைதளங்களில் நல்லாவே ரெஸ்பான்ஸ் இருக்கு. படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பும் ரொம்பவே ஜாஸ்தியாயிடுச்சு. மதகஜராஜா படத்தில் மணிவண்ணன், மனோபாலா நடிச்சிருக்காங்க. ஆனால், அவங்க யாரும் இப்போது நம் கூட இல்லை.
Vijay Antony, Madha Gaja Raja
நானும், விஜய் ஆண்டனியும் இப்போது தான் இணைந்திருக்கிறோம். மியூசிக்கும் நல்லா வந்திருக்கு. விஷால் இந்த படத்துக்காக கடுமையாக உழைச்சிருக்காரு. அவருக்காக இந்தப் படம் வெளிவர வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், இப்போது 12 வருஷத்துக்கு பிறகு இந்தப் படம் வருது என்று பேசியுள்ளார்.
Madhagajaraja, Vishal, Sundar C
இந்தப் படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஷால் உடல் மெலிந்த நிலையில் கை நடுங்கியபடி நின்று பேசியுள்ளார். அப்போது படக்குழுவினர் அவரை உட்காந்து பேசுமாறு அறிவுறுத்தினர். அவர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் கூட இந்தப் படத்தின் பிரஸ் மீட்டிற்கு வந்திருக்கிறார். அதோடு குளிர் காரணமாக அவர் நடுங்கியிருக்கிறார் என்ற படக்குழு விளக்கம் அளித்துள்ளது. மதகஜராஜா படத்தில் நடித்த மனோபாலா, மணிவண்ணன், மயில்சாமி, சிட்டி பாபு, சீனு மோகன் ஆகிய நட்சத்திரங்கள் இன்று உயிருடன் இல்லை.