பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பழனிவேல் நிச்சயதார்த்தம் நடக்குமா, நடக்காதா? டுவிஸ்ட் மேல டுவிஸ்ட்!
Pandian Stores 2 Palanivel Engagement : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பழனிவேல் நிச்சயதார்த்தம் நடக்குமா நடக்காதா என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
Pandian Stores 2 Today Episode, Pandian Stores 2 Palanivel Engagement
Pandian Stores 2 Palanivel Engagement : விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலும் ஒன்று. இந்த சீரியலின் முதல் சீசனுக்கு கிடைத்த அமோக வரவேற்புக்கு பிறகு இப்போது 2ஆவது சீசன் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் நடைபெற்று வருகிறது. எம் மகன் படத்தின் பின்னணி கதையை மையப்படுத்தி இந்த சீரியல் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த தொடரின் முதல் 84 எபிசோடுகளை இயக்குநர் விசி ரவி இயக்கினார்.
Pandian Stores 2 Palanivel Engagement
இதையடுத்து 85ஆவது எபிசோடு முதல் இயக்குநர் இ டேவிட் இயக்கி வருகிறார். கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி முதல் இந்த தொடர் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலானது அண்ணன் தம்பி கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டது.
Akash Premkumar, VJ Kathirvel Kandasamy
இப்போது பாண்டியன் ஸ்டோரிஸ் சீரியலானது அப்பா மற்றும் மகன்கள், மனைவியின் அண்ணன் குடும்பத்தார்களுக்கு இடையில் நடக்கும் சம்பவங்களை வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. இந்த தொடரில் பாண்டியனின் (ஸ்டாலின் முத்து) மகன்களான விஜே கதிர்வேல் (சரவணன்), வெங்கட் ரங்கநாதன் (செந்தில்), ஆகாஷ் பிரேம் குமார் (கதிர்) ஆகியோரும், விலாசினி (குழலி), சத்யா சாய் கிருஷ்ணன் (அரசி) ஆகிய 2 மகள்களும் இருக்கின்றனர்.
Pandian Stores 2 Today Episode, Shalini
அதோடு மூத்த மகனைத் தவிர மற்ற 2 மகன்களு அவர்களாகவே திருமணம் செய்து கொண்டனர். இதில் கதிர் தன்னுடைய தாய்மாமவின் மகள் ராஜேஸ்வரி என்ர ராஜியை (ஷாலினி) அம்மாவின் ஆசைக்காக திருமணம் செய்து கொண்டார். செந்தில் தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். மூத்த மகனுக்கு மட்டும் பெற்றோரின் ஆசைப்படி நிச்சயதார்த்தம் நடந்து திருமணம் முடிந்தது.
Pandian Stores 2 Cast, Pandian Stores 2 Episodes
இந்த நிலையில் தான் இப்போது பாண்டியனின் மனைவியான கோமதியின் தம்பி (நிரோஷா) பழனிவேலுக்கு (ராஜ்குமார் மனோகரன்) பெண் பார்க்கும் படலம் நடைபெற்று முடிந்து இப்போது திருமணம் நிச்சயதார்த்தம் வரையில் வந்துள்ளது. ஆனால், திருமணம் நடக்குமா? பழனிவேல் கடைசி வரை ஒண்டிக்கட்டையாகவே இந்த தொடரில் தொடருவாரா என்பது இயக்குநருக்கு தான் தெரியும்.
Nirosha, Hema Rajkumar, Venkat Renganathan
பழனிவேலின் அண்ணன்களான முத்துவேல் மற்றும் சக்திவேல் ஆகியோருக்கு பாண்டியன் திருமணம் செய்து வைப்பது பிடிக்கவில்லை. இதனால் பாண்டியன் ஏற்பாடு செய்து வைத்த நிச்சயதார்த்தத்தை நிறுத்த திட்டமிட்டிருக்கிறார்கள். இந்த சூழலில் பழனிவேலின் அம்மா காந்திமதி மற்றும் அண்ணன் மனைவிகள் இருவரும் நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு புறப்படுகிறார்கள்.
Pandian Stores 2, Pandian Stores Season 2, Stalin Muthu
கடைசி வரையில் இந்த சீரியலை பார்க்கும் ரசிகர்களுக்கு பழனிவேல் திருமணம் நடக்குமா நடக்காதா என்ற கேள்வியும், சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. உண்மையில் பழனிவேலின் திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்பது ரசிகர்களின் மனதில் தோன்றும் எண்ணம். ஆனால், இயக்குநர் தான் டுவிஸ்டு மேல டுவிஸ்டு கொடுப்பாரே. இந்த திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் என்ன டுவிஸ்ட் வைத்திருக்கிறார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.