இந்நிலையில் சுஷாந்தின் மரணத்திற்காக நீதி கேட்டு போராடி வரும் நடிகை கங்கனா ரணாவத் பாலிவுட் பார்ட்டிகளில் நடக்கும் கருப்பு பக்கங்கள் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வந்த சுஷாந்த் சிங் ராஜ்புட் ஜூன் 14ம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் தந்தை கே.கே.சிங், சுஷாந்தை தற்கொலைக்கு தூண்டியதாக ரியா சக்ரபர்த்தி மீது புகார் கூறியிருந்தார். இதையடுத்து தற்கொலைக்கு உதவுதல், தவறாக வழிநடத்துதல், தவறான கட்டுப்பாடு, வீட்டில் திருட்டு, மோசடி, கிரிமினல், நம்பிக்கையை மீறிய செயல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த பீகார் போலீசார் தீவிர விசாரணையை தொடங்கினர்.

அந்த புகாரில் ரியா சக்ரபர்த்தி, சுஷாந்தின் வங்கி கணக்கில் இருந்து 50 கோடி ரூபாய் மோசடி செய்ததாகவும் பகீர் புகார்கள் குறிப்பிடப்பட்டன. இதனால் அமலாக்கத்துறை முன்பும் ரியா சக்ரபர்த்தி ஆஜராகி விளக்கம் கொடுத்தார். தற்போது இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், ரியா சக்ரபர்த்திக்கு போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்தும் அவர் மீது போதை பொருள் தடுப்பு பிரிவினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: இன்று சிவகார்த்திகேயன் வீட்டில் விசேஷமான நாளாம்... நீங்கள் பார்த்திடாத புகைப்படங்களுடன் அசத்தல் தகவல்கள் !
இந்நிலையில் சுஷாந்தின் மரணத்திற்காக நீதி கேட்டு போராடி வரும் நடிகை கங்கனா ரணாவத் பாலிவுட் பார்ட்டிகளில் நடக்கும் கருப்பு பக்கங்கள் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார். எனக்கு மத்திய அரசு பாதுகாப்பு கொடுத்தால், போதை பொருள் தடுப்பு பிரிவுக்கு உதவ நான் தயாராக இருக்கிறேன். சுஷாந்துக்கு சில டர்ட்டி ரகசியங்கள் தெரிந்திருக்கிறது அதனால் தான் அவரை கொலை செய்துவிட்டார்கள். திரைத்துறையில் மிகவும் பிரபலமான போதை வஸ்து கொக்கைன். அனைத்து பார்ட்டிகளிலும் அது பயன்படுத்தப்படுகிறது. இதை பிரபல நடிகையாக மாறிய பிறகு பார்ட்டிகளில் நானே கண்டேன். போதை தடுப்புப் பிரிவு பாலிவுட்டுக்குள் நுழைந்தால் பல பிரபலங்கள் ஜெயிலில் தான் இருப்பார்கள் எனக்கூறி பகீர் கிளப்பியுள்ளார்.
