இன்று சிவகார்த்திகேயன் வீட்டில் விசேஷமான நாளாம்... நீங்கள் பார்த்திடாத புகைப்படங்களுடன் அசத்தல் தகவல்கள் !
தமிழ் சினிமாவின் டாப் நடிகரான சிவகார்த்திகேயன் வீட்டில் இன்னைக்கு ஒரு விசேஷமான நாள்.. அத்தோட சேர்த்து அவர் பற்றிய சில தகவல்களையும் தெரிஞ்சிக்கலாம் வாங்க...
எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி, தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.
விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றிக் கொண்டிருந்த போதே தனது மாமா மகளான ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார்.
வசதியான குடும்பத்து பெண்ணான ஆர்த்தி தனது கணவர் சிவகார்த்திகேயனின் அனைத்து முயற்சிகளுக்கும் பக்க பலமாக இருந்து வருகிறார்.
சின்ன வயசில் இருந்தே இருவரும் ஒரே பள்ளியில் படித்துள்ளனர். சொந்த மாமாவின் மகளாகவே இருந்தாலும் ஆர்த்தி - சிவகார்த்திகேயன் இடையே காதல் எதுவும் இல்லையாம்.
அம்மா மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ள சிவகார்த்திகேயன் அவர் பார்த்த பெண்ணான ஆர்த்தியை தான் திருமணம் செய்துகொண்டார்.
சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதிக்கு ஆராதனா என்ற மகள் இருக்கிறார்.
அப்படியே அப்பா செல்லம். ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவாக இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என ஆராதனா எடுத்துச் சென்ற பதாகை சோசியல் மீடியாவில் வைரலானது.
அப்பாவிற்கு பாட்டு எழுத ஆர்வம் என்றால், மகளுக்கோ பட மிகவும் பிடிக்கும் கனா படத்தில் ஆராதனா பாடிய 'வாயாடி பெத்த புள்ள' பாடல் 10 மில்லியன் வியூஸ்களைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது.
இன்று சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதிக்கு திருமண நாள்... இந்த நல்ல நாளில் அவருடைய சூப்பரான புகைப்படங்களை பார்க்கலாம் வாருங்கள்...
வரவேற்பு நிகழ்ச்சியில் அசத்தலாக நிற்கும் பொண்ணு - மாப்பிள்ளை
சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதியின் மகிழ்ச்சியான போட்டோ
நடிகர் தனுஷுடன் அசத்தலான ஒரு கிளிக்ஸ்
கோவிலுக்கு மனைவியுடன் செல்லும் சிவகார்த்திகேயன்
குட்டீஸ் உடன் ஒரு கலாட்டாவான போட்டோ
ஆசை கணவருடன் அசத்தலான செல்ஃபி
லேட்டஸ்ட் சிவகார்த்திகேயன் அண்ட் ஆர்த்தி ஜோடி
பொண்டாட்டி பக்கத்தில் நிற்க ஏன் இவ்வளவு பயப்படுறாரு??
மனைவியுடன் பிறந்த நாள் கொண்டாடும் சிவகார்த்திகேயன்