Kangana : கங்கனா விவகாரம்.. "அந்த காவலரின் கோபத்தில் ஞாயம் இருக்கு" - பிரபல கோலிவுட் இயக்குனர் ட்வீட் வைரல்!
Politician Kangana Ranaut : பிரபல நடிகை மற்றும் அரசியல் தலைவரான கங்கனா ரனாவத் நேற்று சண்டிகர் விமானநிலையத்திற்கு சென்றபோது அங்குள்ள CISF பெண் அதிகாரி அவரை தாக்கிய சமத்துவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்பியும், நடிகையுமான கங்கனா ரனாவத், நேற்று சண்டிகர் விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் (CISF) கான்ஸ்டபிலால் தான் தாக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். விமானநிலையத்தின் பாதுகாப்பு சோதனை பகுதியில் கங்கனா ரணாவத் இருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த விஷயத்தில் கங்கனா ரனாவத்தை அறைந்ததாகக் கூறப்படும் சிஐஎஸ்எஃப் காவலர், குல்விந்தர் கவுர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அமலில் உள்ள விவசாய சட்டங்களுக்கு எதிராக (இப்போது அகற்றப்பட்ட) கடந்த 2020-21ல் நடத்தப்பட்ட மாபெரும் போராட்டத்தில் தனது தாயார் பங்கேற்றதாக கங்கனாவை அறைந்த பெண் காவலர் கவுர் கூறியுள்ளார். மேலும் அவருடைய சகோதரரும் ஒரு விவசாயி என்பது குறிப்பிடத்தக்கது.
அப்படி ஒரு வெறித்தனமான காதல்.. ஸ்ரீதேவியிடம் புரோபஸ் பண்ண வீட்டுக்கு சென்ற ரஜினி.. ஆனா நடந்ததே வேற..
2020 டிசம்பரில், மக்கள் வெறும் 100 ரூபாய் பணத்திற்காக போராட்டத்தில் கலந்துகொள்ளத் தயாராக இருப்பதாகத் தெரிவித்ததற்காக, ரணாவத் மீது அவர் மிகவும் வருத்தமடைந்ததாக, காவலர் கவுர் கூறினார். இந்நிலையில் சிஐஎஸ்எஃப் கான்ஸ்டபிள் இடைநீக்கம் செய்யப்பட்டு, அவர் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த விஷயத்தில் பலரும் தங்களுடைய கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் பல வியத்தகு மாற்றங்களை கொண்டுவந்த பிரபல இயக்குனரும் நடிகருமான சேரன், தனது எக்ஸ் பக்க பதிவில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதில் "இந்த பெண்மணியின் (காவல் அதிகாரி) கோபத்தில் நியாயம் இருப்பதாக பார்க்கிறேன்.. அந்த அடி நடிகைக்காகனதல்ல. வாக்களித்த மக்களுக்கானது.. விவசாயிகளின் உணர்வு தெரியாமல் பேசிய அந்த வார்த்தைகளுக்கு பின்னும் இந்த கவர்ச்சிக்கு ஓட்டு விழுகிறது என்றால்.. மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off.." என்று எழுதியுள்ளார்.
ஆனால் மூத்த இயக்குனர் சேரனின் இந்த கருத்துக்கு இணையவாசிகள் பலரும் கடும் கண்டனம் தெரிவிக்கும் அதே நேரம் சிலர் அவர் கருத்துக்கு ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.